விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கும் அஜித்.. விரைவில் வரும் அடுத்த பட அப்டேட்.. இயக்குநர் யார் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு நடிகருக்கு எதிராக மற்றொரு நடிகரை நிறுத்தி வியாபாரம் பார்ப்பது என்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இதனால் அந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது என்பதும் நடந்து வந்துள்ளது. அப்படி எதிரெதிர் துருவங்களாக நின்று வளர்ந்து வந்த நடிகர்கள் என்றால் அது, விஜய மற்றும் அஜித்தை சொல்லலாம். இப்படியான நிலையில் அஜித் மற்றும் விஜய் இடையே தொழில் போட்டி பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அது தற்போது மற்றொரு பரிமாணத்தை எடுத்துள்ளது.

அதாவது நடிகர் அஜித் மற்றும் விஜய் என இருவரும் வளர்ந்து வந்த காலத்தில் தொடங்கி இப்போதுவரை எதிரெதிர் துருவங்களாக இருந்து கொண்டே உள்ளனர். என்னதான் இருவரும் நல்ல நண்பர்கள் என திரையுலகில் கூறிக்கொண்டாலும், இருவரும் தொழில் ரீதியாக ஆரோக்கியமான போட்டியில் உள்ளனர். ஆனால் ரசிகர்களிடையே இந்த ஆரோக்கியமான அணுகுமுறை என்பது வெகு சில இடங்களில் காணப்பட்டாலும், சில இடங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.

ajithkumar vijay salary

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை வெற்றி என்பது கலெக்‌ஷனை மையமாக கொண்டு, பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. இதில் அஜித் மற்றும் விஜய் தங்களது படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லாபத்தினை ஈட்டிக் கொடுத்தாலும், இதில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பது, நடிகர் விஜய் தான். காரணம் விஜய் தனது படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், படத்தின் ப்ரோமோசன்களிலும் கலந்து கொண்டு படத்தினை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல தயாரிப்பாளர்களுக்கு பக்க பலமாக இருக்கின்றார்.

அஜித்: அதனாலோ என்னவோ, அஜித்தைக் காட்டிலும் விஜய்க்கு சம்பளம் அதிகமாகக் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குவதில்லை. ஆனால், அஜித் அப்படி கிடையாது. தான் படத்தில் நடித்து, டப்பிங் முடித்துவிட்டால் அவ்வளவுதான். படத்தின் புரோமோசன்களில் கலந்து கொள்வதில்லை. இதையெல்லாம் யோசித்துப்பார்த்துதானே தயாரிப்பாளர்களும் சம்பளத்தைக் கொடுப்பார்கள்.

ajithkumar vijay salary

விஜய்யை விட: இப்படி இருக்கும்போது விஜய் தனது கடைசி படமான 69வது படத்தில் நடிக்க ரூபாய் 225 கோடிகளை சம்பளமாகப் பெற்றுள்ளார் என்ற தகவல் உள்ளது. இப்படியான நிலையில் அஜித்தை வைத்து அடுத்த படத்தினை உருவாக்க உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. அஜித் தனது குட் பேட் அக்லி படத்திற்கு ரூபாய் 163 கோடிகள் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் அஜித்துக்கு ரூபாய் 200 கோடிகள் சம்பளமாகக் கொடுக்க முன்வந்துள்ளனர்.

ajithkumar vijay salary

அஜித் சம்பளம்: ஆனால் அஜித் தரப்பில் ரூபாய் 226 கோடிகள் சம்பளமாகக் கேட்டதாக ஒரு தகவல் உலா வருகின்றது. அதாவது விஜய் தனது கடைசி படமான 69வது படத்தில் நடிக்க ரூபாய் 225 கோடிகள் சம்பளமாக வாங்கியுள்ளார். எனவே விஜய் சினிமாவில் இருக்கும்போதே, அவரை விட ஒரு கோடியாவது அதிக சம்பளம் வாங்கிவிடவேண்டும் என திட்டமிட்டுத்தான் அஜித் தரப்பில் இருந்து இந்த சம்பளத்தை கேட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது. இதற்கு ரெட் ஜெயண்ட் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது எனவும் இயக்குநராக, அஜித்தை வைத்து ஏற்கனவே பில்லா மற்றும் ஆரம்பம் என இரண்டு பெரும் ஹிட் படங்களைக் கொடுத்த விஷ்ணு வர்தனை கமிட் செய்துள்ளார்கள் என்றும் ஒரு தகவல் வேகமாக கோலிவுட்டில் பரவி வருகின்றது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் உருவெடுத்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X