அவார்ட் வாங்கவே போகமாட்டார்.. ஆளுநர் கூப்பிட்டா போயிடுவாரா? பத்ம பூஷன் அஜித் இப்படி செஞ்சுட்டாரே
சென்னை: நடிகர் அஜித் பெயர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதிகம் அடிபட்டுக் கொண்டு உள்ளது. விடாமுயற்சி ரிலீஸ், கார் பந்தயம், மகள் பிறந்த நாள், ரேஸ் பயிற்சியின்போது விபத்து, கார் ரேஸில் வெற்றி என இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அஜித்தின் பெயர் தொடர்ந்து ஊடகங்களில் அடிபட்டு வந்தது.
இப்படியான நிலையில் மற்ற அனைத்து விஷயங்களையும் ஓவர் டேக் செய்த விஷயம் என்றால், மத்திய அரசு அஜித்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்ததுதான். பத்ம பூஷன் விருது அஜித்க்கு அறிவிக்கப்பட்டதும், ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். மேலும் திரைத்துறையினர் தொடங்கி அரசியல் வட்டத்தில் இருப்பவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து சொன்னார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி விருந்துக்கும் பாராட்டு விழாவிற்கும் அழைப்பு விடுத்தார். இதில் நடிகர் அஜித் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இப்படியான நிலையில் அஜித் இந்த விருந்து மற்றும் பாராட்டு விழா என எதிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற தகவல் உறுதியாகியுள்ளது. இது தொடர்பான தகவலை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
பத்ம விருதுகள்: இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் அஜித்குமார், ஷோபனா மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி என மூன்று பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்புகள் வெளியானதும் ரசிகர்களும் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாராட்டு விழா: இப்படியான நிலையில் வெளிநாட்டில் அஜித் குமார் கார் ரேஸில் கலந்து கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இந்த கார் ரேஸ் வரும் அக்டோபர் மாதம் வரை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடக்கும் என்பதால், அஜித் அதில்தான் கவனம் செலுத்தி வருகிறார். எனவே பாராட்டு விழாவில் அஜித் பங்கேற்கமாட்டார். மேலும் கார் ரேஸ் பந்தயத்தை முடித்த பின்னர், ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி கூறுவார் என கூறப்படுகிறது. அஜித், ஆளுநர் அளிக்கும் பாராட்டு விழாவில், அஜித் கலந்து கொள்ளாததை, கேள்விப்பட்ட இணையவாசிகள் சிலர், அஜித் அவார்டு கொடுத்தாலே போய் வாங்க மாட்டார், இதில் ஆளுநர் நடத்தும் பாராட்டு விழாவிற்கு மட்டும் வந்துவிடுவாரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அஜித்: இணையவாசிகள் கூறுவதைப்போல், அஜித் செய்தியாளர்களை தனது படங்களின் புரோமோஷன்களின் போது கூட சந்தித்ததில்லை. மேலும் விருதுகள் அளித்தாலுமே கூட விருதுகளை பெற அஜித் வந்தது கிடையாது. இப்படியான நிலையில் அவருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளதால், பத்ம விருது பெற அஜித் கட்டாயம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











