Ajithkumar: கமல் ஹாசன்னு பெயர் சொல்லி அழைத்த ரசிகை.. உடனே மாறிய அஜித்தின் ரியாக்ஷன்!
சென்னை: நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகர் மட்டும் இல்லாமல் முன்னணி நடிகரும் கூட. தனது இளம் வயதில் சினிமாவில் பெற்ற வெற்றிகளால், கொஞ்சம் ஆட்டம்போட்ட அஜித்குமார், காலம் போக போக, எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், நிதானமாக செயல்படத் தொடங்கிவிட்டார். தமிழ் சினிமாவில் அஜித்துக்குப் பின்னர் தன்னை பெயர் செல்லியே அழையுங்கள் எனக் கூறிய நடிகர் என்றால் அது கம்ல்ஹாசன் மட்டுமே. இப்படியான நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் அளித்த பேட்டியில், ரசிகை ஒருவர், கமல்ஹாசன் என குறிப்பிட, உடனே அஜித் அதைத் திருத்தினார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
அஜித்குமாருக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு என்றுதான் கூறவேண்டும். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதத்திற்குள்ளாகவே ரிலீஸ் ஆகவுள்ளது. இது ஒரு புறம் இருக்க நாளை மறுநாள் அதாவது ஜனவரி 11ஆம் தேதி தொடங்கும் ஐரோப்பிய கார் பந்தயமான ஃபார்முலா 3 பந்தயத்தில் அவரது அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்ளவுள்ளது. இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த ரேஸில் அஜித்குமார் தலைமையிலான அவரது அணி, களமிறங்கவுள்ளது.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்னர், அஜித்குமார் பயிற்சி செய்து கொண்டு இருந்தபோது அவரது கார் பெரும் விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, அனைவரையும் அதிர்ச்சியில் அழ்த்தியது. இதுமட்டும் இல்லாமல், ரசிகர்கள், பலரும் அஜித்துக்கு என்ன ஆச்சோ என பதறிப்போனார்கள். நல்வாய்ப்பாக அஜித்துக்கு அந்த விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதனால் ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் அஜித்தினை கவனமாக இருக்கச் சொன்னது மட்டும் இல்லாமல், பந்தையத்தில் வெல்ல வாழ்த்து தெரிவித்தனர்.

த்ரோபேக்: அஜித்குமார் பொதுவாகவே, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகவே நிறுத்தி விட்டார். மேலும் தனது படத்தின் புரோமோசன்களிலும் அவர் கலந்து கொள்வதைத் தவிர்த்துவிட்டார். அப்படி இருக்கும்போது அவர் ஏற்கனவே அளித்த பேட்டிகள் இணையத்தில் அவ்வப்போது உலா வந்து கொண்டு உள்ளது.
அஜித் ரியாக்ஷன்: அந்த வகையில் அவரது பில்லா படத்தின் ரிலீஸின் போது அளித்த பேட்டியில் ரசிகர்களுடனும் உரையாடினார். இதில் அஜித்குமாரை பேட்டி எடுத்தவர் நடிகர் சந்தானம். அந்தப் பேட்டிக்கு மத்தியில் ரசிகை ஒருவர் நடிகர் கமல்ஹாசன் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், கமல்ஹாசன் என மட்டும் குறிப்பிட்டார். அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன், நடிகர் அஜித்குமார், மிஸ்டர் கமல்ஹாசன் எனச் சொல்லுங்கள் அல்லது கமல்ஹாசன் சார் எனச் சொல்லுங்கள் என சிரித்துக் கொண்டே ரசிகையின் தவறைத் திருத்தினார். அப்போது அஜித் முகம் சட்டெனெ மாறியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

கமல்ஹாசன்: மேலும் கமல்ஹாசன் சாருடன் என்னை ஒப்பிடும் அளவுக்கு நான் சினிமாவில் எதுவும் செய்துவிடவில்லை. என்னால் அவற்றை செய்யவும் முடியாது. ஆனால் நான் கடுமையாக முயற்சி செய்தால் அவர் செய்தவற்றை நெருங்கமுடியுமே தவிர, அவரைவிட சினிமாவிற்கு என்னால் செய்யமுடியாது. கமல்ஹாசன் சார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் உள்ளார் என பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications











