மகள் அனோஷ்காவுக்கு கார் கதவைத் திறந்து விட்ட அஜித்குமார்.. முதலில் அப்பா.. அப்பறம்தான் ஹீரோ!

சென்னை: நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பார். நல்ல கணவனாக, நல்ல அப்பாவாக, நல்ல மகனாக, நல்ல சகோதரனாக நடந்து கொண்டுள்ளதை தொடர்ந்து பார்த்து வருகின்றோம். சினிமாவில் நடிப்பது எனது வேலை. அதேபோல் உங்களுக்கும் ஒரு வேலை இருக்கும் அந்த வேலையில் நீங்கள் கவனம், செலுத்துங்கள். அதன் மூலம் உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தவர் அஜித்குமார். இவர் பிவி சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வந்தபோது, தனது மகள் அனோஷ்கா மற்றும் மனைவி ஷாலினிக்கு கார் கதவைத் திறந்துவிட்ட சம்பவம் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் தனது பக்குவத்தை, எம்.ஆர். ராதாவுக்குப் பின்னர் வெளிக்காட்டிய நடிகர் என்று கூறலாம். தனது ரசிகர்கள் மன்றத்தைக் கலைத்தது மட்டும் இல்லாமல், தனது சினிமாக்களின் ப்ரோமோசனுக்கு கூட அவர் கலந்து கொள்வதில்லை. இதுமட்டும் இல்லாமல், அவர் தன்னை தனது ரசிகர்கள் அஜித் என்று அழைத்தால் போதும் எந்தவிதமான அடைமொழியும் தேவையில்லை எனக் கூறினார்.

ajithkumar ajithkumar daughter pv sindhu wedding

இப்படியான நிலையில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் உருவாகியுள்ளது. லைகா புரெடக்‌ஷனில் விடாமுயற்சி படமும், மைத்ரீ மூவி மேக்கர்ஸில் குட் பேட் அக்லி படமும் உருவாகியுள்ளது. இதில் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் ரிலீஸ் அஜித்குமாரின் திரை வாழ்க்கையில் அதிக வசூலைக் குவித்த படமாக மாறும் எனகூறப்படுகின்றது.

ajithkumar ajithkumar daughter pv sindhu wedding

அஜித் குடும்பம்: நடிகர் அஜித்குமார் நேற்று அதாவது, டிசம்பர் 24ஆம் தேதி, இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அதாவது, மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் கலந்து கொண்டார்.

ajithkumar ajithkumar daughter pv sindhu wedding

கார் கதவு: நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பின்னர், தனது குடும்பத்தினருடன் அவர், அங்கிருந்து புறப்பட்டார். அதில் காருக்கு அருகில் முதலில் சென்ற அஜித்குமார், தனது மகள் அனோஷ்காவுக்கும் மனைவி ஷாலினிக்கும் கார் கதவுகளைத் திறந்து விட்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், ஷாலினிக்காக கார் கதவுகளைத் திறந்து விட்டது மட்டும் இல்லாமல், காருக்கு வெளியே தொங்கியபடி இருந்த ஷாலினியின் உடையை காருக்குள் எடுத்து விட்டார். அதன் பின்னர், அங்கிருந்தவர்களுக்கு நன்றி சொல்லி புறப்பட்டுச் சென்றார் அஜித்.

ஹீரோ: இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, அஜித்குமார் இந்த அளவுக்கு தனது குடும்பத்தின் மீது அக்கறையாக இருப்பதைப் பார்த்து, பலரும் பொறாமைப்பட்டு வருகின்றனர். மேலும் பலர், இவர்களைப் போல் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கை அனைவருக்கும் அமையவேண்டும் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலரோ, என்னதான் பெரிய கதாநாயகனாக இருந்தாலும், தனது மகளுக்கு பொறுப்பான அப்பாவாகவும், மனைவிக்கு அன்பான கணவனாகவும் இருப்பவர்தான் உண்மையான ஹீரோ. அந்த வகையில், அஜித்குமார் ஹீரோ எனக் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X