மகாராஜா இயக்குநருடன் கைகோர்க்கும் அஜித் குமார்.. குட் பேட் அக்லிக்கு பிறகு தரமான சம்பவம் இருக்கு!

சென்னை: அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் வசூல் வெளிநாடுகளில் நல்ல அளவிற்கு இருக்க, படக்குழு செம மகிழ்ச்சியாக உள்ளனர். இப்படியான நிலையில், அஜித்தின் நடிப்பில் இந்த ஆண்டு கோடையில் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்திற்குப் பின்னர் அஜித் எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. இப்போது சினிமா வட்டாரத்தில் மகாராஜா இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் பெயர் அடிபடுகிறது. அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் விடாமுயற்சி. கடந்த 6ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக சினிமா ரசிகர்களிடமும், குடும்ப ரசிகர்களிடமும் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் பார்த்தவர்கள் இந்த காலத்திற்கு ஏற்ற படம் என்றும், இந்தப் படத்தைப் பார்த்தால் புரிதல் இல்லாமல் விவாகரத்து செய்தவர்கள் கூட, மீண்டும் இணைந்து வாழ்வார்கள். அந்த அளவிற்கு படத்தை மிகவும் எதார்த்தமாக எடுத்துள்ளார் என பாராட்டி வருகின்றனர்.

Ajithkumar Nithilan Swaminathan Vignesh Raja

அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் குட் பேட் அக்லி. இந்தப் படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மைத்ரீ மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்திற்கான பின்னணி இசை கோர்ப்பு பணிகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் ஈடுபட்டு வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடங்கி, ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இந்தப் படத்தின் மீது தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித்: தற்போது அஜித் குமார் தனது கார் ரேசிங்கில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். வரும் அக்டோபர் மாதம் வரை கார் ரேஸ் பந்தயம் நடைபெறவுள்ளதால், இதுவரை அஜித், படங்களில் நடிக்க மாட்டார். ஆனால் அக்டோபருக்கு பின்னர், அஜித் படங்களில் நடிப்பார் என்பதால், அதற்கான கதை கேட்கும் பணிகளை இப்போது இருந்தே அஜித் தரப்பில் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை இயக்க, விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு என இந்த மூன்று இயக்குநர்களும் காத்துக் கொண்டு உள்ளனர்.

Ajithkumar Nithilan Swaminathan Vignesh Raja

மகாராஜா இயக்குநர்: இப்படியான நிலையில், அஜித் தரப்பில் வேறு சில இயக்குநர்களிடமும் கதை கேட்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது. அதாவது மகாராஜா இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் போர் தொழில் இயக்குநர், விக்னேஷ் ராஜா உள்ளிட்டோருடன் கதை கேட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணமாக சில விஷயங்கள் கூறப்படுகிறது.

Ajithkumar Nithilan Swaminathan Vignesh Raja

காரணம்: மகாராஜா, போர் தொழில் மாதிரியான படத்தில் நடிக்கும் போது, அதிகப்படியான நாட்கள் கால்ஷீட் தேவைப் படாது. மேலும், படமும் தரமானதாக வந்துவிடும் என்ற நம்பிக்கை அஜித் தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது. எனவேதான் இவர்களிடம் கதை கேட்கத் தொடங்கியுள்ளனர். அக்டோபர் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினால், மூன்று நான்கு மாதங்களில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மீண்டும் கார் ரேஸுக்கு திரும்பி விடலாம் என அஜித் யோசிக்கிறார் என்பதால் இவர்களிடம் கதை கேட்கின்றார்கள் என கூறப்படுகிறது.

Ajithkumar Nithilan Swaminathan Vignesh Raja

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X