இது சினிமா இல்லை.. சாவை நேரில் சந்திக்கும் நிஜம்.. அஜித்குமாரின் ரேஸிங் டாக்குமென்டரி டிரைலர் ரிலீஸ்
சென்னை: நடிகர் அஜித் குமாரை நடிகர் என்ற வட்டத்தில் அடக்கிவிட முடியாது. சினிமாவில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே பைக் ரேஸ், கார் ரேஸ், பைக் ரைட், துப்பாக்கி சுடுதல் என பலவற்றில் கவனம் செலுத்தியவர். அது மட்டும் இல்லாமல் முறையாக பயின்ற வரும் கூட. இப்படி இருக்கும்போது கடந்த ஒரு ஆண்டாக அஜித் குமாரின் கார் ரேஸ் பந்தயம் குறித்த பேச்சுக்கள் தொடர்ந்து இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படி இருக்கும்போது அவரது கார் ரேஸ் பந்தயம் குறித்த ஆவணப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித்குமாரின் ரேஸிங் அணியான அஜித்குமார் ரேஸிங் அணியானது கடந்த ஆண்டு அஜித்தான் உருவாக்கப்பட்ட அணி. இந்த அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சர்வதேச அளவிலான கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறது. இப்படி இருக்கும்போது அவரது கார் ரேஸ் பயணத்தை ஆவணப்படமாக பதிவு செய்து அதை பெரிய ஆவணப்படமாக வெளியிடும் வேலையில் இயக்குநர்கள் ஏ.எல். விஜய் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இப்படியான ஆவணப்படம் வெளியாகிறது என்ற தகவலே ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி இருக்கும்போது இந்த ஆவணப்படத்தின் டிரைலரை அஜித்குமார் ரேஸிங் சார்பில் வெளியிட்டுள்ளனர். சுமார் ஒரு நிமிடம் 57 விநாடிகள் கால அளவு கொண்ட இந்த டிரைலர் வீடியோவில் அஜித்குமாரின் ரேஸிங் அணியின் டிரெஸ்ஸிங் ரூம் உரையாடல்கள், பயிற்சி வீடியோக்கள், வெற்றியை எட்டியதும் அவர்கள் அதை எப்படி கொண்டாடினார்கள் என்பது குறித்த பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்த டிரைலர் வீடியோவில், அஜித் கார் ரேஸ் குறித்து கூறும் மிகவும் முக்கியமான கருத்து கவனிக்க வேண்டியது. அதுவும் சினிமா துறையில் உச்ச நடிகராக உள்ள அஜித், சினிமாவுடன் கார் ரேஸை ஒப்பிட்டுச் சொல்லி உள்ள கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது, சினிமாவில் ஒரு டேக் நன்றாக வரவில்லை என்றால், ரீடேக் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ரேஸிங்கில் ரீ என்ற ஒன்று கிடையாது. நீங்கள் செய்யக் கூடிய ஒரு தவறு, உங்கள் காரை சேதப்படுத்தும், ஏன் உங்கள் உயிர் போகலாம், குடும்பத்தினர், நண்பர்களை துயரத்தில் ஆழ்த்தி விட முடியும், மற்றவர்களையும் காயப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும், டாக்குமென்டரி எப்போது ரிலீஸ் ஆகும் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











