AK: காரில் அந்தர் பல்டி அடித்த பின்னர் அஜித் என்ன செய்தார் தெரியுமா? இந்த மனுஷனுக்கு பயமே வராதா?
சென்னை: அஜித் குமார் தற்போது கார் ரேஸில் மிகவும் பிஸியாக இருக்கிறார். தனது பெயரில் அஜித் குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கி களமிறங்கி வருகிறார். இது மட்டும் இல்லாமல், அவரது அணி கடந்த மாதம் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. இப்படி இருக்கும்போது, அஜித் குமார் ரேஸிங் அணி தற்போது ஸ்பெயினில் நடைபெற்று முடிந்த கார் பந்தயத்தில் அவரது கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய பின்னர் காருக்குள் அமர்ந்திருந்த அஜித் குமார் என்ன செய்தார் என்பது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் அஜித்குமாருக்கு சினிமா மீது, ஆர்வம் ஏற்படுவதற்கு முன்னர் ரேஸிங் மீது ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. பைக் மற்றும் கார் ரேஸ்களில் கலக்கி வருபவர். பைக் ரேஸில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தில், சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன் பின்னர் பைக் ரேஸில் அஜித் கலந்து கொள்ளவில்லை. ஆனால் கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவரது பெயரில் கார் ரேஸிங் அணியை உருவாக்கி, 24 மணி நேர பந்தயத்தில் களமிறங்கி வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

இப்படியான நிலையில் ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்தின் கார் விபத்தைச் சந்தித்தது. பந்தயத்தின் போது சக போட்டியாளரின் கார் இவரது கார் மீது மோதியதால், பெரும் விபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இரு கார்களும் மோதிக் கொண்டதால், அஜித்தின் கார் காற்றில் இரண்டு முறை பல்டி அடித்து நின்றது. அதேபோல் அஜித்தின் கார் மீது மோதிய கார், தரையிலேயே இரண்டு முறை சுற்றி, நின்றது. இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

அந்தர் பல்டி: இந்த வீடியோவைப் பார்த்த, அஜித் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், பலரும் பதறிப் போனார்கள். காரணம் அஜித்தின் கார் அந்தர் பல்டி அடித்த வீடியோவைப் பார்த்தால் சினிமா காட்சிகளில் ஏற்படும் விபத்தை விட அச்சுறுத்தலாக இருந்தது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த சுரேஷ் சந்திரா, அதாவது அஜித்தின் மேனேஜர், அஜித்தின் மீது எந்த தவறும் இல்லை எனக் குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த பலரும், அஜித்தின் மீது தவறு இருப்பதாக தெரியவில்லை எனக் கூறினார்கள்.

விடாமுயற்சி: இந்நிலையில், இன்று அதே விபத்து வீடியோவை மீண்டும் பகிர்ந்து உள்ளார் சுரேஷ் சந்திரா. அந்த வீடியோவில் கார் விபத்துக்குள்ளாகி கார் இரண்டு முறை காற்றில் அந்தர் பல்டி அடித்து அதன் பின்னர் கார் தரையில் நின்றது. அப்போது கார் ஆஃப் ஆகிவிட்டதால், அஜித் காரை ஆன் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் கார் ஆன் ஆகவில்லை. ஆனாலும் விடாமல் அஜித் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சுரேஷ் சந்திரா, சல்யூட் சீஃப் என கேப்ஷன் இட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அஜித்தின் விடாமுயற்சியை பார்த்து ஆச்சரியப்படுவதாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
Salute to our Chief 🫡#AjithKumarracing#neverevergiveup pic.twitter.com/b1hjflUlaW
— Suresh Chandra (@SureshChandraa) February 25, 2025
இரண்டாவது விபத்து: ஏற்கனவே ஜனவரியில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற கார் ரேஸ்க்கு முன்னர் அஜித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டபோது, அவரது கார் பக்கவாட்டு சுவரில் மோதி பெரும் விபத்தை எதிர்கொண்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவியது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அந்த வகையில் இந்த ஆண்டில் கார் ரேஸ் தளத்தில் அஜித் எதிர்கொண்டுள்ள இரண்டாவது விபத்து இது.



Click it and Unblock the Notifications











