Ajithkumar: மரணத்துக்கு அருகில் சென்று வந்த அஜித்.. சக ரேஸர் சொன்ன விஷயம்தான் இன்னும் பயம் காட்டுது!

துபாய்: நடிகர் அஜித்குமார், அவர் நடிகராக பொதுவெளியில் எந்த அளவுக்கு அறியப்படுகின்றாரோ, அதே அளவுக்கு, அவருக்கு கார் ரேஸ் மீதும், பைக் ரேஸ் மீதும் இருக்கும் ஆர்வம் குறித்து அறியாதவர்கள் மிகக் குறைவாகத்தான் இருப்பார்கள். அஜித் தற்போது தீவிரமான கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். வரும் 11ஆம் தேதி அதாவது, இன்னும் மூன்று நாளில் தொடங்கவுள்ள ஐரோப்பா ஃபார்முலா 3 கார் ரேஸில் தனது அணியுடன் அஜித் கலந்துகொள்ளவுள்ளார். அதற்காக அவர் துபாயில் பயிற்சியில் ஈடுபட்டபோது, அவருக்கு விபத்து ஏற்பட்டது. விபத்துக்குப் பின்னர் அஜித்குமார் ரேஸிங் அணியில் இருக்கும் சக ரேஸரான, ஃபேபியன் டுஃபியக்ஸ் தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது.

Ajithkumar Ajithkumar Racing Ajithkumar Car Accident

அதாவது கார் ரேஸ் பந்தயங்களைப் பொறுத்தவரையில் விபத்து என்பது நிகழக்கூடிய ஒன்றுதான். அதிலும் குறிப்பாக, விபத்து, காயம், மீளமுடியாத காயங்கள், சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் விபத்துகள் என்பது கண்ணிமைக்கும் நொடிக்குள் ஏற்பட்டுவிடும். கார் பந்தயங்களில் கலந்து கொண்டு உயிரிழந்த பல ரேஸர்கள், உள்ளார்கள்.

Ajithkumar Ajithkumar Racing Ajithkumar Car Accident

கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக பல நூறு கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டு இருக்கும். இதில் யாராவது ஒருவர் சின்ன தவறு செய்தாலோ, அல்லது காரில் ஆபத்தை விளைவிக்கும் அளவிக்கு எதாவது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலோ அவ்வளவுதான், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை கற்பனை கூட செய்துபார்க்க முடியாது. அந்த அளவுக்கான விபரீதங்கள் இந்த ரேஸில் உள்ளது.

Ajithkumar Ajithkumar Racing Ajithkumar Car Accident

விபத்து: அதேநேரத்தில் ரேஸில் தவறு செய்யாமல் வாகனத்தை இயக்கத்தான் அனைத்து அணிகளும், வீரர்களும் தீவிர பயற்சியில் ஈடுபடுவார்கள். அப்படி அஜித்குமார் தீவிர பயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும்போதுதான் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விபத்து ஏற்பட்டது. அதாவது, அஜித் இயக்கி வந்த கார், சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்திற்கும் மேலாகச் சென்றுகொண்டு இருந்தது. அப்போது திடீரென அஜித்தின் கார் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மோதி அந்தரத்தில் பறந்தது.

Ajithkumar Ajithkumar Racing Ajithkumar Car Accident

சுரேஷ் சந்திரா: இந்தக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. மேலும் உடனே மீட்புக் குழுவினர் வந்து, அஜித்தை அழைத்துச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக அஜித்தின் மேலாளர், சுரேஷ் சந்திரா தெரிவிக்கையில், அஜித் சாரை, விபத்துக்குப் பின்னர் மருத்துவர்கள் சோதித்தார்கள். நல்வாய்ப்பாக அவருக்கு சின்ன காயம்கூட ஏற்படவில்லை. அவர் ரேஸில் கலந்து கொள்வார். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவார் எனத் தெரிவித்தார்.

அதிர்ச்சி: இந்நிலையில் அஜித்குமார் ரேஸிங் அணியில் இருக்க கூடிய சக ரேஸரான, ஃபேபியன் டுஃபியக்ஸ் அஜித்க்கு நடந்த விபத்து குறித்து தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அஜித் சிறு காயங்கள் கூட இன்றி, நலமுடன் உள்ளார். கற்பதற்கான பயணம் என்பது என்றைக்கும் முடியாது என்பதைக் சுட்டிக்காட்டும் நாளாக அஜித் விபத்துக்குள்ளான நாள் அமைந்துவிட்டது. இடையூறுகள் எதுவாக இருந்தாலும் ரேஸிங் மீது எங்களுக்கு உள்ள ஆர்வம், ஒவ்வொரு அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளவும், தொடர்ந்து முன்னேறவும் எங்களைத் தூண்டுகின்றது. இந்த ரேஸிங் பயணம் பாடங்கள் நிறைந்தது. அதை அணியாகவும் குடும்பமாகவும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளேம்" எனத் தெரிவித்துள்ளார்.

Ajithkumar Ajithkumar Racing Ajithkumar Car Accident

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X