Ajithkumar: ஓட்டப்பந்தயத்தில் முதல் இடம் பிடித்த அஜித் மகன்.. மின்னல் வேகம்.. ஷாலினி பகிர்ந்த வீடியோ
சென்னை: நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக், பள்ளிக் குழந்தையான ஆத்விக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் உடையவர். இன்னும் சொல்லப்போனால், அப்பா அஜித்தைப் போலவே மகன் ஆத்விக்கும் ஸ்போர்ட்ஸ்-இல் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார். இப்படியான நிலையில், ஆத்விக் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில், ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடம் வென்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி படமும், ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கிடையில், அஜித்குமார் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, வரும் அக்டோபர் மாதம் வரை கார் பந்தயத்தில்தான் கலந்து கொள்ளவுள்ளார். ஏற்கனவே துபாயில் நடைபெற்ற, கார் ரேஸில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது அவரது, அஜித்குமார் ரேஸிங் அணி. இப்படியான நிலையில் அவரது அணி தொடர்ந்து, உலகம் முழுவதும் நடைபெறவுள்ள கார் ரேஸிங்கில் கலந்து கொள்ளவுள்ளார்.

அஜித்குமார் தனது குடும்பத்திற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பவர். மகன் தன்னை எதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லச் சொன்னால், படப்பிடிப்புத் தளத்தில் இருந்தே கிளம்பிப் போய்விடுவார். அண்மையில் கூட பிரேசிலில் நடைபெற்ற கால்பந்து போட்டியை தனது மகன் பார்க்க ஆசைப்பட்டார் என்ற காரணத்திற்காக, அழைத்துச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் கூட வெளியானது.

ஆத்விக் அஜித்குமார்: அஜித்குமார் கார் ரேஸில் கலந்து கொண்டு, மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ள நிலையில், அவருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். நாட்டிற்கே பெருமை சேர்த்த அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்துள்ளது. இது அஜித் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது மட்டும் இல்லாமல், அவருக்கு தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தது.

வீடியோ: இப்படியான நிலையில் அஜித்குமாரின் மகன் ஆத்விக், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயம் போட்டிகளில் சிறப்பாக ஓடி, முதல் இடத்தினைப் பெற்றார். இது தொடர்பான வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள், வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஷாலினி தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

வாழ்த்து: வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அப்பா சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவிக்கின்றார், மகன் பள்ளிகளுக்கு இடையில் வெற்றிகளையும் பதக்கங்களையும் இப்போது இருந்தே குவிக்கின்றார் என வாழ்த்தவும் கமெண்ட் செய்யவும் தொடங்கிவிட்டனர். அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை, அதே ரத்தம் அப்படித்தானே இருக்கும், குட்டித் தல, எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகள் என வாழ்த்தி வருகின்றார்கள்.


Click it and Unblock the Notifications











