Ajithkumar: பல நூறு கிலோமீட்டர்கள் Bike Ride.. செம டையர்டில் அஜித் என்ன செய்யறாருனு பாருங்க!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் பைக் ரைடிங் மீது தீராத ஆர்வம் கொண்டவர். பைக் ரைட் மட்டும் இல்லாமல், கார் ரேஸிலும் அஜித் குமாருக்கு இருக்கும் ஆர்வம் குறித்து பலருக்கும் தெரிந்ததே. அவரது அஜித் குமார் ரேசிங் அணி, வெளிநாடுகளில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கார் ரேஸில் கலந்து கொண்டு, வெற்றிகளைக் குவித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் பைக் ரைடில் ஈடுபட்டு வரும் அஜித் குமார் ரெஸ்டாரன்ட் ஒன்றில், தரையில் அமர்ந்து ஓய்வு எடுக்கும், புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அஜித் குமாருக்கு பைக் ரைடிங் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல. இளமைக் காலத்தில் பைக் மெக்கானிக்காக பணியாற்றிய அஜித், பைக்குகளின் மீதான தனது ஆர்வத்தை சினிமாவில் நுழைந்த பிறகும் தொடர்ந்தார். 2013-ல் சென்னையிலிருந்து பெங்களூரு வரை பைக்கில் பயணம் செய்து பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தினார்.

Ajithkumar Sitting At Floor Random Resturant after very long Bike Ride Photo Goes Trending
Photo Credit:
அஜித்தின் பைக் ரைடிங் பயணங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி டிரெண்டாகி வருகின்றன. 2022-ல், லடாக் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் மேற்கொண்ட பைக் பயணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அஜித் குமார் பைக் ரைடில் பயன்படுத்திய BMW R 1250 GS பைக், 200 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய, 30 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட உயர்தர மாடல் என்பதே ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. ஒருமுறை, ஹிமாச்சலில் ஒரு பைக்கரின் பஞ்சரான வாகனத்தை சரி செய்ய உதவி செய்து, அவருடன் சகஜமாகப் பழகி, டீ குடித்து உரையாடியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

பூனையோடு விளையாட்டு: சில தினங்களுக்கு முன்னர் கூட அஜித் ஒரு பூனைக் குட்டியுடன் விளையாடி, "சென்னைக்கு வரியா?" என்று கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. கடந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் திடீரென டிரெண்டான வீடியோவில், "பயணம் செய்யுங்கள், அது உங்களைச் சிறந்த மனிதராக மாற்றும். மதமும் சாதியும் வெறுப்பை உருவாக்கினாலும், பயணங்கள் அன்பை விதைக்கும்" என்று கூறினார். இவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.

Ajithkumar Sitting At Floor Random Resturant after very long Bike Ride Photo Goes Trending

புகைப்படம் டிரெண்ட்: இந்நிலையில் இணையத்தில் தற்போது புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது ரெஸ்டாரண்ட் ஒன்றில் தரையில் அமர்ந்து கொண்டு தனது மொபைலை பார்த்துக் கொண்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 30, 40 கிலோ மீட்டர் பைக் ஓட்டினாலே உடல் வலி எடுத்துவிடுகிறது. அஜித் பல நூறு கிலோமீட்டர்கள் பைக் ஓட்டுவார் என்பதால், அவருக்கு எவ்வளவு உடல் வலி இருக்கும் எனவும் பேசி வருகிறார்கள்.

அடுத்த படம்: அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படமான குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அஜித் குமாரின் அடுத்த படத்தையும் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X