Ajith: இனி குட் பேட் அக்லி பட அப்டேட்ஸ் கிடையாது? அஜித் போட்ட அதிரடி உத்தரவு.. கப் சிப் மோடில் ஆதிக்
சென்னை: அஜித் நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆகவுள்ள படம் கு பேட் அக்லி. விடாமுயற்சி படத்தின் படுதோல்விக்கு பின்னர் அஜித் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். படக்குழு தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்பட்ட அப்டேட்கள் அஜித் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதால், ரசிகர்கள் இந்த படத்திற்காக காத்துக் கொண்டு உள்ளார்கள். இப்படியான நிலையில் அஜித் தற்போது படத்தின் அப்டேட்களை வெளியிடவேண்டாம் என உத்தரவு போட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகிறது.
அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது, அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், முதல் பாடல் என அடுத்தடுத்து ரிலீஸ் செய்து படக்குழு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

அஜித் குமார்: அஜித் தற்போது தனது அஜித் குமார் ரேசிங் அணியுடன் பிரேசிலில் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வந்தாலும், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டுதான் உள்ளார் என கூறப்படுகிறது. மேலும், படத்தின் டீசர் வெளியிடப்பட்டு 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் கடந்து அஜித்க்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
உத்தரவு: இப்படியான நிலையில் தற்போது அஜித் தரப்பில் இருந்து குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 27 ஆம் தேதி வரை குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியிடக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளாராம் அஜித். அதாவது வரும் 27ஆம் தேதி, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் பாகம் 2 படம் ரிலீஸ் ஆகவுள்ளது. எனவே அதுவரை குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்கள் எதுவும் ரிலீஸ் செய்யக்கூடாது என உறுதியாக சொல்லிவிட்டாராம்.

காரணம்: இதற்கு காரணம் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்கள் வந்தால் திரைத்துறை முழுவதற்கும் குட் பேட் அக்லி படம் குறித்த பேச்சுகள் தான் அதிகம் இருக்கும். எனவே வீர தீர சூரன் படம் வெளியாகும் வரை குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்களை வெளியிடக்கூடாது என அஜித் மிகவும் உறுதியாக கூறியுள்ளார். இதனால் தயாரிப்பு நிறுவனமும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் அஜித் சொன்னதைக் கேட்டு கப் சிப் மோடுக்குச் சென்று விட்டார்கள் என கூறப்படுகிறது. இதனால் படத்தின் இரண்டாவது பாடலை வரும் 28ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக பேச்சுகள் உலா வருகிறது. அஜித்தின் இந்த செயல் குறித்து தெரிந்து கொண்டவர்கள் அஜித்தை பாராட்டி வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











