சாரே.. கொல மாஸ்! செல்ஃபி வீடியோ எடுத்த அஜித்.. வேறமாதிரி ரெடி ஆகிட்டு இருக்காரு!

துபாய்: நடிகர் அஜித்குமார், இவருக்கு நடிப்பு மட்டும்தான் அடையாளமா எனக் கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். காரணம் அஜித்குமாரின் தொழில் நடிப்பு. அதாவது அஜித்குமார் தனது வருமானத்திற்காக செய்யும் வேலை சினிமாவில் நடிப்பது. அதேநேரத்தில் அஜித்தின் மற்றொரு அடையாளம் என்பது அவர் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் கலந்து கொள்வது. இதுமட்டும் இல்லாமல், துப்பாக்கி சுடுதல், புகைப்படங்கள் எடுத்தல், சிறிய ரக விமானங்களை ஓட்டுதல் உள்ளிட்டவை அஜித்தின் ஹாபிகளில் ஒன்றாக இருக்கின்றது. இதுமட்டும் இல்லாமல் பைக்கில் உலகைச் சுற்றுவதும் சமையலில் அதிக ஆர்வம் காட்டுவதும் அவரது ஹாபிகளில் இருக்கின்றது. இப்படியான நிலையில், அஜித் ஐரோப்பாவில் நடைபெறவுள்ள கார் பந்தயத்திற்கு தயாராகிக் கொண்டு உள்ளார். இந்நிலையில் அங்கு அவர் எடுத்த செல்ஃபி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

அஜித்குமார் தான் புதிதாக வாங்கியுள்ள ஆடி காரில் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் அந்த வீடியோவில் அஜித்குமாரே கார் செல்லும் வேகத்தை நோட் செய்யச் சொல்கின்றார். அதேநேரத்தில் ஒரே கையில் காரின் ஸ்டேரிங்கை பிடித்து தைரியமாகவும் அசால்ட்டாகவும் ஓட்டுகின்றார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த வீடியோ தமிழ் நாட்டிலே அல்லது இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியிலோ எடுத்தது அல்ல என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது என பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.

ajithkumar european gt4 championship

220 கி.மீ வேகம்: அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சில மாதங்களுக்கு முன்னர் தனது எக்ஸ் பக்கத்தில் 6 நிமிடங்களுக்கு மேலான ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ அஜித்குமார் கடந்த ஜூன் 21ஆம் தேதி கார் ஒட்டியது தொடர்பானதுதான். துபாய் ஆர்டோம் எனப்படும் பிரபல கார் ரேஸ் மைய்யத்தில் அஜித் கார் ஓட்டினார். அதில், சுமார் 220 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாகச் செல்லும் அஜித்குமார் கண்ணில் கொஞ்சம் கூட பயமில்லாமல் காரை ஓட்டினார். மேலும் துபாயில் உள்ள கார் ரேசர்களிடம் உரையாடலிலும் ஈடுபட்டார்.

ajithkumar european gt4 championship

டெஸ்ட் ட்ரைவ்: இந்நிலையில் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், புதிய பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், துபாயில் உள்ள ஆர்டோம் கார் ரேஸ் மைய்யத்தில் ஃபெராரி 488 இ.வி.ஒ சேலஞ் காரை செஸ்ட் செய்துக் கொண்டிருக்கும் அஜித்குமார், நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ரேஸிங் சீசனுக்கு தயாராகி வருகிறார். மேலும் புதிய ஹெல்மட் பெயிண்ட் ஸ்கீமை அறிமுகப்படுத்துவதிலும் மகிழ்ச்சி. அஜித்குமார் Adrenalin Fueled பந்தையத்திற்கு ரெடி எனவும் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ajithkumar european gt4 championship

செல்ஃபி வீடியோ: இந்த அறிவிப்பு எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நடிகர் அஜித் தானே எடுத்த செல்ஃபி வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அஜித்தே வெறித்தனமா கார் ரேஸ்க்கு தயாராகி வருகின்றார்போல, அதான் செல்ஃபி வீடியோவெல்லாம் எடுத்து வேறலெவலில் கலக்குகின்றார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ajithkumar european gt4 championship

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X