Ajith Kumar: இது என்னோட டைம்.. நான் இறங்கி ஆடியே தீருவேன்.. கார் ரேஸ் குறித்து அஜித்குமார் பளீச்!

சென்னை: நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸிலும் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார். இன்னும் சொல்லப்போனால், கார் ரேஸில் கலந்து கொள்ள அதிக பணம் தேவைப்படும் என்பதால், அதை ஈட்டத்தான் சினிமாவில் நடிக்கவே வந்துள்ளார் என்று கூறலாம். தற்போது அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கி சர்வதேச நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றிகளையும் பதக்கங்களையும் குவித்து வருகிறார். இதற்கிடையில் அஜித்குமார் தனது கார் ரேஸ் ஆர்வம் குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கார் ரேஸில் ஈடுபட்டு வரும் அஜித் குமார் ஜி.டி. 3 ரக கார் பந்தயத்தில் தனது அஜித் குமார் ரேஸிங் அணியுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நீண்ட நெடிய பந்தயத்தில் கலந்து கொள்ள தான் நடித்துக் கொண்டிருந்த படங்களில் தன்னுடைய அனைத்து வேலைகளையும் கடந்த ஆண்டு இறுதியிலேயே முடித்துக் கொடுத்துவிட்டார். இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி படமும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆனது. இதில் விடாமுயற்சி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இன்னும் சொல்லப்போனால் படம் அஜித் ரசிகர்களையே கவரவில்லை. ஆனால் குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் வெற்றியைக் குவித்தது.

Ajithkumar Talking About How He Understand Race Accidents
Photo Credit:

வெற்றிகள்: அஜித் குமாரின் அஜித் குமார் ரேஸிங் அணி கடந்த மே மாதத்திற்குள் இரண்டு முறை மூன்றாவது இடத்தையும் ஒரு முறை இரண்டாவது இடத்தையும் வென்றது. இது தொடர்பான பதக்கங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்த கார் பந்தயம் தொடங்குவதற்கு முன்னர் அஜித் குமார் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மிகவும் மோசமான விபத்தில் சிக்கிக் கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் நல்வாய்ப்பாக அஜித்குமாருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

விபத்துகள்: அதேபோல் கார் ரேஸின் போது இவர் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது, மற்றொரு கார் ரேஸர் செய்த தவறினால் அஜித் குமார் ஓட்டிச் சென்ற காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் இருந்தும் அஜித் குமார் காயங்களின்றி தப்பினார். இப்படியான நிலையில் கார் ரேஸ் குறித்து அஜித் குமார் தற்போது தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இது என்னோட டைம்: அதாவது, " மற்றவர்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை வைத்து என்னை நான் எடை போட்டுக் கொள்ள மாட்டேன். எப்போதும் எனது சொந்த முயற்சியில் நான் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டும் தான் நான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். படப்பிடிப்பில் காயங்கள் ஏற்படுவதைத் போலத்தான் ரேஸிங்கிலும், ஆனாலும் நான் கவனமாக இருக்கிறேன். விரைவாக கற்றுக் கொள்கிறேன். இது என்னுடைய நேரம் நான் பின் வாங்கமாட்டேன்" என்று தெரிவித்துள்ளார். அஜித் குமார் இவ்வாறு கூறியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X