Ajithkumar: ஐரோப்பிய கார் பந்தயத்துக்கு தயாராகும் அஜித்.. எந்த கார் ஓட்டப்போறாருனு தெரியுமா?
துபாய்: நடிகர் அஜித்குமார், இவருக்கு நடிப்பு மட்டும்தான் அடையாளமா எனக் கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். காரணம் அஜித்குமாரின் தொழில் நடிப்பு. அதாவது அஜித்குமார் தனது வருமானத்திற்காக செய்யும் வேலை சினிமாவில் நடிப்பது. அதேநேரத்தில் அஜித்தின் மற்றொரு அடையாளம் என்பது அவர் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் கலந்து கொள்வது. இதுமட்டும் இல்லாமல், துப்பாக்கி சுடுதல், புகைப்படங்கள் எடுத்தல், சிறிய ரக விமானங்களை ஓட்டுதல் உள்ளிட்டவை அஜித்தின் ஹாபிகளில் ஒன்றாக இருக்கின்றது. இதுமட்டும் இல்லாமல் பைக்கில் உலகைச் சுற்றுவதும் சமையலில் அதிக ஆர்வம் காட்டுவதும் அவரது ஹாபிகளில் இருக்கின்றது. இப்படியான நிலையில், பல வருடங்களாக கார் ரேஸ் பந்தையங்களில் கலந்து கொள்ளாமல் இருந்த நடிகர் அஜித்குமார் தற்போது, மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ளப்போகின்றார் என்ற தகவலை நடிகர் ஜான் கொக்கென் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெக்ட்யூல்ட் நடைபெற்று வருகின்றது என கூறப்படுகின்றது. குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர் நடிகர் அஜித்குமார். இதனாலே படப்பிடிப்பு நேரம் மற்றும் குடும்பத்தினருடன் செலவு செய்யும் நேரம் தவிர பிற நேரங்களில் கார் ரேஸ்களுக்கு பயிற்சி செய்வது, கார் ரேஸிற்காக தயாரிக்கப்பட்ட கார்களை ஓட்டிப்பார்ப்பது என பல விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு அஜர்பைஜான் செல்வதற்கு முன்னர் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்று, கார் ரேஸில் கலந்து கொள்ளும் கார் ரேஸ் பந்தையக்காரர்களுடன் கார் ஓட்டினார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.

234 கி.மீ வேகம்: இதையடுத்து, அஜித்குமார் தான் புதிதாக வாங்கியுள்ள ஆடி காரில் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் அந்த வீடியோவில் அஜித்குமாரே கார் செல்லும் வேகத்தை நோட் செய்யச் சொல்கின்றார். அதேநேரத்தில் ஒரே கையில் காரின் ஸ்டேரிங்கை பிடித்து தைரியமாகவும் அசால்ட்டாகவும் ஓட்டுகின்றார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த வீடியோ தமிழ் நாட்டிலே அல்லது இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியிலோ எடுத்தது அல்ல என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது என பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.

220 கி.மீ வேகம்: அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சில மாதங்களுக்கு முன்னர் தனது எக்ஸ் பக்கத்தில் 6 நிமிடங்களுக்கு மேலான ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ அஜித்குமார் கடந்த ஜூன் 21ஆம் தேதி கார் ஒட்டியது தொடர்பானதுதான். துபாய் ஆர்டோம் எனப்படும் பிரபல கார் ரேஸ் மைய்யத்தில் அஜித் கார் ஓட்டினார். அதில், சுமார் 220 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாகச் செல்லும் அஜித்குமார் கண்ணில் கொஞ்சம் கூட பயமில்லாமல் காரை ஓட்டினார். மேலும் துபாயில் உள்ள கார் ரேசர்களிடம் உரையாடலிலும் ஈடுபட்டார்.

டெஸ்ட் ட்ரைவ்: இந்நிலையில் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், புதிய பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், துபாயில் உள்ள ஆர்டோம் கார் ரேஸ் மைய்யத்தில் ஃபெராரி 488 இ.வி.ஒ சேலஞ் காரை செஸ்ட் செய்துக் கொண்டிருக்கும் அஜித்குமார், நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ரேஸிங் சீசனுக்கு தயாராகி வருகிறார். மேலும் புதிய ஹெல்மட் பெயிண்ட் ஸ்கீமை அறிமுகப்படுத்துவதிலும் மகிழ்ச்சி. அஜித்குமார் Adrenalin Fueled பந்தையத்திற்கு ரெடி எனவும் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











