Ajith World Tour - துரத்திக்கொண்டு வந்த ரசிகர்.. நிறுத்திய அஜித்.. ச்ச என்னா மனுஷன்யா - ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: Ajith World Tour (அஜித் வேர்ல்ட் டூர்) பைக்கில் வேகமாக பின் தொடர்ந்த ரசிகரை பாதியிலேயே நிறுத்தி அவருடன் அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
அஜித்குமார் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்தது. போட்டியாக களமிறங்கிய வாரிசு படத்தைவிட துணிவு படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் அஜித் உற்சாகத்தோடு காணப்படுவதாகவும் அடுத்தடுத்த படங்களையும் ஹிட்டாக்கிட வேண்டும் என்ற முனைப்போடு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏகே 62: வழக்கமாக ஒரு படத்தை முடித்து சின்ன ரெஸ்ட் எடுத்து அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித் துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் . லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதையின் இரண்டாம் பாதி லைகா நிறுவனத்துக்கு பிடிக்காததால் அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன்.
மகிழ் திருமேனி : விக்னேஷ் சிவன் வெளியேறியதை அடுத்து அஜித் 62ஆவது படத்தை இயக்க மகிழ் திருமேனி கமிட்டாகியிருக்கிறார். கதையை தயார் செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியிருந்த அவர் தற்போது கதையை இறுதி செய்துவிட்டார். இதனையடுத்து அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் வேர்ல்ட் டூர்: இதற்கிடையே பரஸ்பர மரியாதை பயணம் என்ற பெயரில் நடிகர் அஜித்குமார் பைக்கில் வேர்ல்ட் டூர் செல்கிறார். ஏகே 62 படத்தை முடித்துவிட்டு செல்லலாம் என முடிவெடுத்திருந்த அவர் படம் தொடங்க தாமதம் ஆனதால் முதல்கட்ட பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் இப்போது திபெத், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் தனது சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டானது.
புதிய வீடியோ: இந்நிலையில் வேர்ல்ட் டூர் செய்யும் அஜித் படுவேகத்தில் பைக்கை ஓட்டிக்கொண்டு செல்கிறார். அஜித் செல்வதை தெரிந்துகொண்ட ரசிகர் ஒருவர் தன்னுடைய பல்சர் பைக்கில் வேகமாக பின் தொடர்ந்து செல்கிறார். ஆரம்பத்தில் தன்னை பின் தொடர்பவரை கண்டுகொள்ளாத அஜித் ஒருகட்டத்தில் அதை தெரிந்துகொண்டு உடனடியாக பைக்கை ஸ்லோ செய்துவிடுகிறார். பிறகு அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தனது ரசிகர் படுவேகமாக வருவதை உணர்ந்துகொண்ட அஜித் உடனடியாக தன்னுடைய பைக்கை ஸ்லோ செய்து ரசிகரின் ஆசையை நிறைவேற்றிவிட்டாரே. ஏகே செம மனிதர் என கூறி அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.
ஆவணப்படமாகிறதா அஜித்தின் வேர்ல்ட் டூர்: இதற்கிடையே அஜித் செய்யும் உலக சுற்றுப்பயணத்தை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வீடியோவாக பதிவு செய்யவிருக்கிறார் என்ற புதிய தகவல் ஒன்று வெளியானது. மேலும், இந்த பயணத்தை பதிவு செய்வதற்காக நீரவ் ஷாவும் அஜித்துடன் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாகவும், அது ஆவணப்படமாக உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











