Ajith: மொத்த மலேசியாவுமே அவருடையதுதான்.. வரிசை கட்டிய AK ரசிகர்கள்.. தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு எப்போது?
மலேசியா: நடிகர் அஜித்குமார் இன்றைய தேதிக்கு நடிகர் மட்டும் இல்லை. அவர் தீவிரமான மற்றும் வெற்றிகரமான கார் ரேஸர். அவர் தற்போது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள ஆசியா அளவிலான கார் பந்தயத்தில் கலந்து கொள்ள தீவிரமான பயிற்சி எடுத்து வருகிறார். அதே நேரத்தில் இன்று அதாவது டிசம்பர் 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள 12 மணி நேர கார் ரேஸிலும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட அஜித்தை பார்க்க ரசிகர்கள் திரண்டிருந்தார்கள். அடுத்து தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகர்களுக்காக நீண்ட நேரம் நின்றிருந்து, சுமார் 500க்கும் மேற்பட்டோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அஜித். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் அஜித் குமார் தனது பெயரில் அஜித் குமார் ரேஸிங் என்ற கார் ரேஸ் அணியை தொடங்கி உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அவரது அணி உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து கார் ரேஸில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்துள்ளது. இப்படி இருக்கும்போது நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி இதுவரை மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் இரண்டு முறை மூன்றாவது இடமும் , ஒரு முறை இரண்டாவது இடத்தையும் வென்று சாதித்தது.

பெருமிதம்: சில வாரங்களுக்கு முன்னர், அஜித்திற்கு சிறந்த ஜெண்டில்மேன் டிரைவர் என்ற விருதை வழங்கி கௌரவித்தது, இத்தாலியில் உள்ள ஒரு கார் ரேஸ் குழுமம். இப்படி தனது கார் ரேஸ் வாழ்க்கையில் அஜித் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார். இதற்காக பல ஆண்டுகள் அஜித் கடினமாக உழைத்துள்ளார். தனது கார் ரேஸ் அணிக்கு பல வழிகளில் அங்கீகாரங்கள் கிடைத்து வருகிறது. இவை எல்லாம் அஜித்த்தும் அவரது குடும்பத்தினர் மற்றும் கார் ரேஸ் அணியினருக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறதோ, அதே அளவுக்கு அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது.
மலேசியா ரசிகர்கள்: இந்த வகையில் இன்று அதாவது டிசம்பர் 6ஆம் தேதி அஜித்தின் ரேஸிங் அணி, 12 மணி நேர, கார் ரேஸ் பந்தயத்தில் பங்கு பெற்று வருகிறது. அதாவது மலேசியாவின் செபாங்க் சர்க்யூட்டில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய 12 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் அவரது அணி களமிறங்கி உள்ளது. இதற்காக அந்த சர்க்யூட்டில் அவரது அணி பயிற்சி மேற்கொண்டது. அப்போது அஜித்தைப் பார்க்க ரசிகர்கள் திரண்டார்கள். ரசிகர்களைப் பார்த்து, கையசைத்தும், கையெடுத்து வணங்கியும், அவர்களை நோக்கி ஹார்ட்டின் சைகை காட்டியும் அசத்தினார் அஜித். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது.
வீடியோ: அதேபோல் நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகர்களுக்காக நீண்ட நேரம் நின்றிருந்து, சுமார் 500க்கும் மேற்பட்டோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அஜித். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான வீடியோவை, குட் பேட் அக்லி படத்தில் வரும் மொத்த மலேசியாவுமே அவருடையதுதான் என்ற டயலாக் உடன் பின்னணி இசையை சேர்த்து, வீடியோவை உருவாக்கி பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











