Good Bad Ugly Update: யாரைப் பார்த்தும் பயம் இல்லை.. ரிலீஸ் தேதியில் மாற்றமே இல்லை.. GBU மாஸ் அப்டேட்!
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிந்துவிட்டது. விடாமுயற்சி படத்திற்காக குட் பேட் அக்லி படக்குழுவினர் காத்திருந்தனர். இதனால் எந்தவிதமான அப்டேட்டும் கொடுக்காமல் இருந்தனர். விடாமுயற்சி ரிலீஸ் ஆகிவிட்டதால், இப்போது குட் பேட் அக்லி குறித்த அப்டேட்டுகளை படக்குழுவினர் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. காரணம், ஏப்ரல் 10ஆம் தேதி, அதையடுத்து சித்திரை முதல் தேதி, அடுத்த இரண்டு வாரத்தில் அஜித்தின் பிறந்த நாள் என்பதால், ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என படக்குழு திட்டமிட்டது. இதற்கிடையில், இணையத்தில் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் என பேச்சுகள் எழுந்தது. இதனால் தனுஷ் ரசிகர்கள் பலரும் இணையத்தில், ஏப்ரல் 10, தனுஷின் இட்லி கடை படம் ரிலீஸ் ஆகிறது, அதனால்தான், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்ற படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கிண்டல் அடித்து கொண்டு இருந்தார்கள்.

இப்படியான நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மீண்டும் ஒரு முறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். அதாவது படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் எந்த மாற்றமும் இல்லை, " சி யூ ஆன் ஏப்ரல் 10 மாமே" என தெரிவித்துள்ளார்கள். இது மட்டும் இல்லாமல், படத்தில் த்ரிஷா நடித்து உள்ளதையும், த்ரிஷாவின் லுக்கினையும் த்ரிஷா ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயர், ரம்யா எனவும் தெரிவித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் பின்னணி இசையில், படக்குழு வெளியிட்டுள்ள 17 நொடி வீடியோ செம மாஸாக உள்ளதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளார்கள்.
த்ரிஷா: குட் பேட் அக்லி படம் அஜித் குமாரின் 63வது படம். படம் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும், ஆர்வமும் தொற்றிக் கொண்டது. கடந்த சில நாட்களாக படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாக உள்ளது என்ற தகவல் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. இதனால் ரசிகர்கள் பலரும் செம குஷியில் இருந்தனர். இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 7.03க்கு படத்தின் அப்டேட் வெளியாகும் என காத்துக் கொண்டு இருந்தார்கள். சில தொழில்நுட்ப கோளாறினால் அப்டேட் வெளியாவதில் தாமதமானது. இப்படியான நிலையில், அப்டேட் இரவு 8.02க்கு வெளியானது.
ஃபயர்: ரசிகர்கள் டீசர் குறித்த அப்டேட் வரும் என நினைத்துக் கொண்டு இருந்தபோது, படத்தில் த்ரிஷா நடித்துள்ளதை பளிச் என்று தெரிவித்து விட்டார்கள். த்ரிஷாவின் லுக் மற்றும் எக்ஸ்பிர்ஷனைப் பார்த்த ரசிகர்கள், படக்குழு வெளியிட்ட வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் படத்தின் ரிலீஸ் தேதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என படக்குழு மாஸான அப்டேட் மூலம் தெரிவித்துள்ளதால், ரசிகர்கள் இணையத்தில் ஃபயர் விட்டு வருகிறார்கள். அஜித்தின் வேறு சில லுக்குகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











