Vidaamuyarchi: விடாமுயற்சி சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை? புக்கிங் தொடங்கியும் ரசிகர்கள் சோகம்!

சென்னை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் வியாழக்கிழமை அதாவது, பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் புக்கிங் தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது. இது ரசிகர்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் மற்றொரு வகையில் கொஞ்சம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

லைகா தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படம் ரிலீஸில் சில பிரச்னைகள் இருந்ததால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. இப்படியான நிலையில் படம் வரும் 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

ajithkumar vidaamuyarchi booking

படத்தின் டிரைலர், டீசர் மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், படத்தின் பின்னணி இசை டீசரில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அஜித் நடித்த படங்களில் இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமான திரைக்கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

ajithkumar vidaamuyarchi booking

புக்கிங்: படத்தின் புக்கிங் இன்று முதல் தொடங்கியுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், ஒரு பக்கம் கொஞ்சம் கவலையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இப்போது தொடங்கப்பட்டுள்ள புக்கிங்கில் எங்குமே 9 மணிக் காட்சிகள் இல்லை. பெரும்பாலான இடங்களில் 12 மணிக் காட்சிகளும், 12 மணிக்கு மேலான காட்சிகளுமே முதல் காட்சிகளாக உள்ளது.

ajithkumar vidaamuyarchi booking

சிறப்புக் காட்சி: இதனால் சிறப்புக் காட்சிக்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக விழா காலங்களில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அதாவது காலை 9 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். அப்படி இருக்கும்போது, வரும் 6ஆம் தேதி விழாக் காலம் இல்லை என்பதால் தமிழ் நாடு அரசு சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்குமா எனத் தெரியவில்லை. மேலும் அன்றைய தினத்தில் விடாமுயற்சி மட்டுமே ரிலீஸ் ஆவதால், பெரும்பாலான தியேட்டர்களில் விடாமுயற்சி படமே ரிலீஸ் ஆகவுள்ளது. மல்டி ஃப்ளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் மற்ற சில படங்களும் திரையிடப்படும்.

ajithkumar vidaamuyarchi booking

கோட்: தமிழ் நாடு அரசு அனுமதி கொடுத்தால், காலை 9 மணிக் காட்சிக்கு புக்கிங் ஓபன் செய்ய வேண்டும் என்பதால், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் நண்பகல் 12 மணிக் காட்சிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட காட்சிகளுக்கான புக்கிங் ஸ்லாட்டினை ஓபன் செய்துள்ளார்கள் என கூறப்படுகிறது. ஏற்கனவே கோட் படத்திற்கு காலை 9 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனவே விடாமுயற்சிக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

ajithkumar vidaamuyarchi booking

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X