Vidaamuyarchi: விடாமுயற்சி எஃபக்ட்ஸ்.. விட்டுட்டு போன மனைவி.. தேடிப்போகும் ரசிகர்.. கண்ணீர் பேட்டி!

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆன படம், விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் அஜித்துடன், அர்ஜுன், ரெஜினா, த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1000 திரைகளுக்கு மேல் ரிலீஸ் ஆனது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் படம் பார்த்த ரசிகர் ஒருவர், பிரிந்து போன தனது மனைவியைத் தேடி போவதாக தெரிவித்துள்ளார். அவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அஜித் குமார் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு துணிவு படம் ரிலீஸ் ஆனது. அதன் பின்னர் அஜித் கமிட் ஆன படம் விடாமுயற்சி. படத்தினை முழுக்க முழுக்க அஜர்பைஜானில் நடத்த திட்டமிட்டதாலே என்னவோ, படத்தின் படப்பிடிப்பு நிறைவடைவதில் பல சவால்கள் ஏற்பட்டது. குறிப்பாக, அஜர்பைஜானில் ஏற்பட்ட மணல் புயல் மற்றும் பனிப்புயல் காரணமாக படத்தை திட்டமிட்ட நாட்களுக்குள் எடுத்து முடிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே படத்தின் படப்பிடிப்பு சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. படம் முதலில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால், படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை.

ajithkumar vidaamuyarchi review vidaamuyarchi

படம் நேற்று ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் தழுவல் என்றாலும், படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில், ஆல்டர் செய்தும் திரைக்கதை அமைத்து உருவாக்கியுள்ளனர். படம் வழக்கமான அஜித்தின் மசாலா படங்களைப் போல் இல்லாமல், முற்றிலும் வேறு விதமான எந்தவிதமான மாஸான காட்சிகள் எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பலர் படத்தை பாராட்டி வருகின்றனர். அதில் படம் பார்த்த ரசிகர் ஒருவர் படம் பார்த்த பின்னர் தன்னைப் பிரிந்து போன மனைவியைத் தேடி போவதாக பேசியுள்ளார்.

ajithkumar vidaamuyarchi review vidaamuyarchi

கண்ணீர் பேட்டி: அதாவது, அந்த ரசிகர் பேசும்போது, " விடாமுயற்சி படத்தை பார்த்த பின்னர், என்னோட மனசுல பெரிய பாதிப்பு ஏற்பட்டு விட்டது. என் பொண்டாட்டி என்னை விட்டு போய் விட்டாள். அவளை நான் போய் கூட்டிட்டு வரப்போகிறேன். அவள் ஏன் கோபப்பட்டு போனாள் என எனக்குத் தெரியவில்லை. என்ன காரணத்தினால் அவளுக்கு என் மீது கோபம் வந்தது என எனக்கு இன்னும் தெரியவில்லை. என்ன காரணமாக இருந்தாலும் சரி, நான் என் பொண்டாட்டியை தேடிப் போகின்றேன். விடாமுயற்சி படத்தைப் பார்த்து என் பொண்டாட்டி மேல அந்த அளவிற்கு நான் பாசத்தை இறக்கிவிட்டேன்.

ajithkumar vidaamuyarchi review vidaamuyarchi

மிஸ் செய்கிறேன்: பொண்டாட்டி மேல எந்த அளவுக்கு பாசமா, நேசமா இருக்கணும்னு இந்தப் படத்துல எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எந்த காரணத்தைக் கொண்டும் நீங்க உங்க பொண்டாட்டியை கொடுமை படுத்தாதீங்க. இந்தப் படத்துல அதைத்தான் எடுத்துச் சொல்லி இருக்காங்க. நான் ரொம்ப கஷ்டப்படுறேன், என் பொண்டாட்டியை நான் ரொம்பவும் மிஸ் செய்யறேன். நீங்க உங்க பொண்டாட்டிய மிஸ் செய்யாதீங்க. உங்க பொண்டாட்டி எங்காவது போயிருந்தால் போய் தேடுங்க. அஜித் ஒரு காரை வச்சுக்கிட்டு எங்கெங்கோ போய் தேடுறாரு, நீங்களும் போய் தேடுங்க" என பேசியுள்ளார். இந்த ரசிகர் கண்ணீர் மல்க பேசிய இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X