Vidaamuyarchi: ப்ரீ புக்கிங்கில் கெத்து காட்டும் விடாமுயற்சி.. தவிடுபொடியாகும் பாக்ஸ் ஆஃபீஸ் ரெக்கார்டு!
சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் வரும் 6ஆம் தேதி அதாவது, வரும் வியாழக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ப்ரீ புக்கிங் இன்று முதல் தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னை தொடங்கி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ப்ரீ புக்கிங் தொடங்கிவிட்டது. இந்நிலையில் பல தியேட்டர்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் புக் ஆகிவிட்டது. அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.
அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், உருவாகியுள்ள இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது. படம் ஆங்கிலப் படமான ப்ரேக் டவுன் என்ற படத்தின் தழுவல் என கூறப்படுகின்றது. ஆனால், அது உண்மையா என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது.

படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசியில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தினை திட்டமிட்டபடி பொங்கலுக்கு ரிலீஸ் செய்யமுடியவில்லை. படத்தின் டீசர், டிரைலர் ஆகியவற்றைப் பார்க்கும்போது, படத்தின் பெரும்பாலான பகுதி முழுவதும் அஜித்திற்கு ஒரே காஸ்ட்யூம் என்பது புரிகின்றது.
ஹாலிவுட் : இதுமட்டும், இல்லாமல், படம் அஜித்தின் வழக்கமான படமாக இல்லாமல், முற்றிலும் வித்தியாசமான படமாக எடுக்க வேண்டும் என திட்டமிட்டு இந்தப் படத்தினை படக்குழு எடுத்துள்ளது. படத்தில் அர்ஜுன் மற்றும் ஆரவ் வில்லன்களாக நடித்துள்ளனர். படத்தின் டீசர் மற்றும் டிரைலரைப் பார்க்கும்போது ஒரு ஹாலிவுட்டுக்கு நிகரான ஒளிப்பதிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1000 ஸ்கீர்ன்கள்: படத்தின் புக்கிங் இன்று முதல் அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்கியது. மல்டி ஃப்ளக்ஸ், சிங்கிள் ஸ்கீர்ன் என தமிழ்நாடு முழுவதும் படம் கிட்டத்தட்ட 1000 ஸ்கீர்ன்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால், புக்கிங் தொடங்கியதில் இருந்தே பல காட்சிகளுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் புக் ஆகிவிட்டது.
ப்ரீ புக்கிங் வசூல்: படத்தினை சிறப்புக் காட்சியில் திரையிட தமிழ்நாடு அரசு இன்னும் அனுமதி வழங்காததால், 9 மணி காட்சிகளுக்காக, 10 மணிக் காட்சிகளின் ஸ்லாட்கள் ஓபன் செய்யப்படாமல் உள்ளது. ஆனாலும் படத்திற்கான புக்கிங்கில், நல்ல வசூல் இதுவரை கிடைத்துள்ளது. சுமார், 25 கோடிகளில் இருந்து 30 கோடிகள் வரை ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் செய்யும் என கூறப்படுகின்றது. இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வசூல், அஜித்தின் முந்தைய படங்களுக்கான ப்ரீ புக்கிங் வசூலைவிட அதிகம் என்பதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications