Vidaamuyarchi : ஓவர் போதை.. அஜித் ரசிகர்கள் செய்யும் ஆபத்தான விஷயங்கள்.. இதெல்லாம் கொண்டாட்டமா?

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படம் இன்று அதாவது, பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால், தமிழ்நாடு முழுவதும் விடாமுயற்சி திரையிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்தும், திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. அஜித்தின் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் படம் ரிலீஸ் ஆகியுள்ளதால், ரசிகர்கள் தியேட்டர் வாசலில் எக்கச்சக்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில ரசிகர்கள் போதையில் தாங்கள் என்ன செய்கிறோம், தாங்கள் செய்யும் செயலில் எவ்வளவு ஆபத்து உள்ளது என்பதை, உணராமல் செய்து வருகின்றனர்.

பொதுவாக பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால், அவர்களது ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்து, தங்களது மகிழ்ச்சியை கொண்டாட்டமாக வெளிப்படுத்துவார்கள். இது வழக்கமான ஒன்றுதான். அப்படி இருந்தும், சில ரசிகர்கள், ஆபத்தான சேட்டைகள் செய்து பலரையும் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றனர்.

ajithkumar vidaamuyarchi fdfs vidaamuyarchi

அஜித் ரசிகர்கள்: உதாரணத்திற்கு, கடந்த 2023ஆம் ஆண்டு அஜித்தின் துணிவு படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த பரத்குமார் என்ற 19 வயதே ஆன இளைஞர், சென்னை ரோகிணி தியேட்டருக்கு முன் வந்த லாரியை வழிமறித்து, அதன் மீது ஏறி ஆட்டம் போட்டார். அப்போது தவறி விழுந்த பரத்குமார் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதேபோல் பல நடிகர்களின் ரசிகர்கள் கட்-அவுட் பேனர்கள் மீது, ஏறி பால் அபிஷேகம் செய்கிறோம், பேனருக்கு மாலை அணிவிக்கின்றோம் என மேலே ஏறி, தவறி விழுந்து காயம் அடைந்து, கை, கால் உடைந்து அவதிப்பட்ட ரசிகர்களும் உள்ளார்கள்.

விடாமுயற்சி ரிலீஸ்: இப்படியான நிலையில் விடாமுயற்சி படம் பார்க்க வந்த ரசிகர்களில் சிலர் போதையில் தாங்கள் என்ன செய்கின்றோம் எனத் தெரியாமலே, ஆபாத்தன் விஷயங்களைச் செய்து வருகின்றனர். அதாவது, ரசிகர் ஒருவர், கையில் மிகவும் அதிக சக்தி வாய்ந்த பட்டாசினை கையில் வைத்து வெடிக்கின்றார். இந்தப் பட்டாசு அது உருவாக்கப்பட்ட தன்மையில் இருந்து மாறி, ஆபாத்தான முறையில் வெடித்தால், ரசிகரின் கையில் பெரும் காயம் ஏற்படும். தலைக்கு மேல் வைத்து பட்டாசை வெடிப்பதால், அவரது உயிருக்கு கூட எதாவது ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனை அங்கு கூடியிருந்த ரசிகர்கள் சிலர் வேண்டாம் என கூறினாலும், சிலர் அந்த ரசிகரின் செயலை ஊக்குவிக்கும் விதமாக, செயல்பட்டனர்.

போதை: அதேபோல் மற்றொரு ரசிகர், தான் போதையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல், காவல் துறையின் அறிவுரைகளை பின் தொடராமல், இன்னும் சொல்லப்போனால் காவல்துறையினர் கூறுவதை காது கொடுத்துக் கேட்காமல், ஆட்டம் போட்டுக் கொண்டு, இருகின்றார். மேலும் காவல்துறையினரிடம் என்னை அரெஸ்ட் பண்ணுங்க சார் என கத்திக் கத்திக் கூறிக்கொண்டு உள்ளார். இது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பார்த்த இணையவாசிகள், இதுதான் கொண்டாட்டமா? ஆபத்தை உணராமல், போதையில் அஜித் ரசிகர்கள் இப்படி செய்து கொண்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X