Vidaamuyarchi: பார்டரைத் தாண்டினால் எல்லாமே பச்சையா இருக்கேப்பா.. விடாமுயற்சி வசூலில் தேறுமா?
சென்னை: அஜித்குமார் நடிப்பில் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் அஜித்துடன், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கான புக்கிங் தமிழ்நாட்டில் அதிரடியாக இருந்தாலும், வெளி மாநிலங்களில் அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

விடாமுயற்சி படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, எடுக்கப்பட்ட படம். அஜர்பைஜானில் படம் முழுக்க முழுக்க படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது அஜித் மற்றும் ஆரவ் பெரும் விபத்தை எதிர்கொண்டார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் வேலைகள் முழுமையாக முடியாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. ஒருவழியாக படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மட்டும் இல்லாமல், டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

விடாமுயற்சி: ஆனால் படமும் சில காரணங்களால் பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகவில்லை. இது ரசிகர்களுக்கு அப்செட்டினைக் கொடுத்தாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கவில்லை. படம் பிப்ரவரி 6 ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்தியாவைக் கடந்து பல நாடுகளில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில், அஜித்தின் முந்தைய படங்களை விட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்கு வெளிநாடுகளில் நல்ல வசூல் கிடைத்தாலும், இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியே, எதிர்பார்த்த அளவிற்கு, டிக்கெட் புக்கிங் நடக்கவில்லை.

டிக்கெட் புக்கிங்: அதாவது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் முதல் நாளுக்கான, அனைத்து கட்சிகளுக்கும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டது. குறிப்பாக பல லட்சம் டிக்கெட்டுகள் தமிழ்நாட்டில் முதல் நாளுக்கான டிக்கெட்டுகளை விற்றுத் தீர்ந்த உள்ளன. ஆனால் தமிழ்நாட்டின் பார்ட்ரைக் கடந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என மற்ற மாநிலங்களில் படத்திற்கான டிக்கெட்டுகள் எதிர்பார்த்த அளவிற்கு, விற்பனை ஆகவில்லை. இது படத்தின் மொத்த வசூலிலும் முதல் நாள் வசூலிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும். தமிழ்நாட்டினைக் கடந்து, வெளி மாநிலங்களில் புக் மை ஷோ வில் பார்த்தால், அனைத்தும் பச்சையாக உள்ளது.



Click it and Unblock the Notifications











