Vidaamuyarchi Teaser: விடாமுயற்சி ஹாலிவுட் தரம்.. இங்கிலீஷ் டீசரை வெளியிட்டு படக்குழு மிரட்டல்!
சென்னை: நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருந்து அஜித் ரசிகர்களுக்கு விடை கிடைத்துவிட்டது என்று தான் கூற வேண்டும். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. இந்தப் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் இவரது நடிப்பில் அடுத்து எந்த படம் வெளியாகும் குழப்பம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. அதாவது அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகின்றார். இதில் எந்தப் படம் முதலில் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருந்தது. ஏற்கனவே டீசர் ரிலீஸ் ஆன நிலையில் இன்று படத்தின் ஆங்கில டீசரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.
அஜித்குமார் பொதுவாக ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார். ஆனால், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னரே, குட் பேட் அக்லி படத்தின் படத்தில் ஒப்புக் கொண்டது மட்டும் இல்லாமல், படத்தில் தனது காட்சிகளை முழுமையாக நடித்தும் முடித்துள்ளார். குட் பேட் அக்லி படத்தினைப் பொறுத்தவரையில் படம் அறிவிக்கப்பட்டபோதே, 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் 2024ஆம் ஆண்டு தீபாவளிக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாததால், ரசிகர்கள் மத்தியில், படம் எப்போதுதான் ரிலீஸ் ஆகும் என கேட்கப்பட்டது. மேலும் ஏற்கனவே பொங்கலுக்கு குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி இருந்தது. இப்படியான நிலையில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி நள்ளிரவு 11.08 மணிக்கு விடாமுயற்சி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

டீசர்: டீசர் நள்ளிரவில் வெளியிடப்பட்டாலும், ரசிகர்கள் ஆண்டுக் கணக்கில் காத்துக் கொண்டு இருந்ததால் இணையத்தில் இப்போதும் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இப்படியான நிலையில், டீசரைப் பார்த்த ரசிகர்கள் டீசரைக் கொண்டாடி வருகின்றனர். திரையுலகம் முழுவதும் தற்போது விடாமுயற்சி டீசர் குறித்தான பேச்சுதான் பரவலாக உள்ளது. பொங்கலுக்கு குட் பேட் அக்லி வரும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும்போது, விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பின்னணி இசை: இதுமட்டும் இல்லாமல், படத்தின் டிசரில் இடம் பெற்றுள்ள அனிருத்தின் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அனிருத்தும் தனது எக்ஸ் பக்கத்தில், தியேட்டரில் விடாமுயற்சி படத்தின் க்ளைமேக்ஸில் வரும் பின்னணி இசையை ரசிகர்கள் கொண்டாடுவதைப் பார்க்க நான் ஆவலாக உள்ளேன் என பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது வெளியாகியுள்ள டீசரில், அஜித் ரசிகர்கள் அஜித்தைக் கொண்டாடி வரும், அஜித்தே.. கடவுளே.. என்ற வசனத்தை மைய்யப்படுத்தி பின்னணி இசை அமைத்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இங்கிலீஷ் டீசர்: மேலும் படத்தின் டீசரைப் பார்க்கும்போது விடாமுயற்சி, அஜித்துக்கு இன்னொரு மங்காத்தா படம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.இப்படியான நிலையில் படத்தின் இங்கிலீஷ் டீசரை படக்குழு ரிலீஸ் செய்து மிரட்டியுள்ளது. மேலும் படத்தினை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துள்ளதை திரையுலகிற்கு சொல்லாமல் சொல்லியுள்ளனர் என்ற பேச்சு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











