Vidaamuyarchi Update: விடாமுயற்சி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி..? அஜித் ரசிகர்களே அலர்ட் ஆகிக்கோங்க

சென்னை: அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம், விடாமுயற்சி. இந்தப் படம் வரும் தைப் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தினை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படியான நிலையில் படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

மேலும் படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற ஆவலிலும் ரசிகர்கள் உள்ள நிலையில் படக்குழு முதல் பாடல் மற்றும் டிரைலரை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகின்றது.

ajithkumar vidaamuyarchi vidaamuyarchi trailer

விடாமுயற்சி படத்தில் அஜித், த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படமான ப்ரேக் டவுன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம். படத்தினை பெரும் பொருட்ச்செலவில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுமட்டும் இல்லாமல், டீசரில் இடம் பெற்ற பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றது.

ajithkumar vidaamuyarchi vidaamuyarchi trailer

அதேபோல் படத்தில் த்ரிஷாவுக்கும் அஜித்துக்குமான மாண்டேஜ் பாடல் அண்மையில்தான் தாய்லாந்தில் படபிடிப்பு செய்யப்பட்டது. படத்தின் படப்பிடிப்பே கடந்த வாரத்தில்தான் முழுமையாக முடிந்தது. படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டு உள்ளார்கள்.

ajithkumar vidaamuyarchi vidaamuyarchi trailer

அப்டேட்: குறிப்பாக படத்தில் இடம் பெற்றுள்ள பாடல், படத்தின் டிரைலர் ஆகியவற்றை படக்குழு எப்போது ரிலீஸ் செய்யும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர். இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி ஆக்கும் பொருட்டு படக்குழு இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு அப்டேட்டும் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே அட்டகாசமான அப்டேட்டும் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக திரைத்துறையில் பேச்சுகள் அடிபடுகின்றது.

ajithkumar vidaamuyarchi vidaamuyarchi trailer

டிரைலர் ரிலீஸ் தேதி: அதாவது வரும் 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள், படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை, லிரிக் வீடியோவாக ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதேபோல், ஜனவரி 1ஆம் தேதி, படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே படத்தின் டீசர் எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது. அதேபோல் இந்த அப்டேட்டுகளும் முன்னறிவிப்பு இல்லாமல், வெளியாகும் என கூறப்படுகின்றது.

ajithkumar vidaamuyarchi vidaamuyarchi trailer

சிக்கல்: இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, இன்னும் விடாமுயற்சி படத்திற்காக அதிகாரப்பூர்வ ரீமேக் உரிமம், பிரேக் டவுன் படத்தை தயாரித்த பாமவுண்ட் நிறுவனம் வழங்கவில்லை என கூறப்படுகின்றது. ஒருவேளை உரிமம் கிடைக்க தாமதமானால், படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மட்டும் இல்லாமல், படத்தின் ரிலீஸ் தேதியே மாறிப்போக அதிக வாய்ப்பு உள்ளது என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் அடிபடுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X