என்னப்பா இதெல்லாம்! இயக்குநருடன் சண்டைக்கு நிற்கும் அஜித்.. விடாமுயற்சி தள்ளிப்போக யார் காரணம்?

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் உருவாகி வருகின்றது. பொதுவாகவே ஒரு படத்தில் நடித்து, டப்பிங் பணிகளை முடித்த பின்னர் அடுத்த படத்தில் கமிட்டாகும் பழக்கத்தை பல வருடங்களாக பின்பற்றி வருபவர் நடிகர் அஜித்குமார். ஆனால் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே அஜித் கமிட்டான படம் குட் பேட் அக்லி. படத்தில் கமிட்டானது மட்டும் இல்லாமல் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

மேலும் குட் பேட் அக்லி படம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் விடாமுயற்சி படத்தில் நடித்த கார் சேஸிங் காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அஜர்பைஜானில் நடைபெற்ற படப்பிடிப்பு, ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக பல்வேறு தகவல்களும் கோலிவுட் வட்டாரத்தில் உலா வந்தது.

Ajithkumar Vidaamuyarchi Vidaamuyarchi Movie Vidaamuyarchi Shooting Magizh Thirumeni LYCA Productions Good Bad Ugly

குறிப்பாக அஜித்துக்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையே பணம் விசயத்தில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், லைகா நிறுவனம் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை வெளியிடுவதில்தான் அதிக அக்கறை காட்டியதாகவும் இது அஜித்துக்கு கோபத்தை உண்டாக்கியது எனவும் தகவல்கள் வந்தது. லைகா தரப்பில் அஜித் கூறியதால்தான் அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது லைகா நிறுவனம் பணப் பிரச்சனையில் இருக்கின்றது. அஜித்தை சம்பளத்தை குறைக்கச் சொல்லுங்கள் எனவும் கேட்டதாகவும் இதுவும் அஜித்தை கோபப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

Ajithkumar Vidaamuyarchi Vidaamuyarchi Movie Vidaamuyarchi Shooting Magizh Thirumeni LYCA Productions Good Bad Ugly

பணப்பிரச்சனை: மேலும் பணப்பிரச்சனையால் படப்பிடிப்பை தாமதப்படுத்தி வந்தது லைகா நிறுவனம் என கூறப்படுகின்றது. இதனால் அஜித் விடாமுயற்சி படத்திற்காக கொடுத்த தேதிகள் முடிவடைந்து விட்டதாகவும் தற்போது அவர் வந்து நடித்துக் கொடுப்பதே படத்தில் கமிட்டாகிவிட்டார் என்பதற்காகத்தான் எனவும் கூறப்படுகின்றது.

இயக்குநருடன் கருத்து வேறுபாடு: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் உலாவரத் தொடங்கியுள்ளது. அது, அஜித்திற்கும் விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் இடையே படம் தொடங்கிய நாட்களில் இருந்து சிறு சிறு கருத்து வேறுபாடு இருந்துள்ளது. ஒரு சில காட்சிகளில் அஜித் மிகப்பெரிய மாற்றம் செய்யும் அளவிற்கு திருத்தங்கள் கூறியதாகவும், ஒரு சில காட்சிகளில் அஜித்தின் நடிப்பில் திருப்தி இல்லாதபோது, மகிழ் திருமேனி மாற்றுக்கருத்து கூறியதாகவும் இது இருவருக்கும் இடையே மிகப்பெரிய விரிசலை உண்டாக்கியுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

Ajithkumar Vidaamuyarchi Vidaamuyarchi Movie Vidaamuyarchi Shooting Magizh Thirumeni LYCA Productions Good Bad Ugly

புதிய தலைவலி: இதனால் மீதமுள்ள படப்பிடிப்பில் அவுட்டோரில் எடுக்கும் காட்சிகளை மட்டும் அஜர்பைஜானில் எடுத்துக் கொள்ளுங்கள் மீதி படத்தை சென்னையில் செட் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் எனவும் அஜித் கூறியதாகவும் கூறப்படுகின்றது. இது லைகா நிறுவனத்திற்கு கூடுதல் செலவைத் தரும் என்பதால் எற்கனவே உள்ள பிரச்சனைகளுக்கு நடுவே இது புது தலைவலியாக மாறியுள்ளது. லைகா நிறுவனம் அஜித்தை தங்கள் வழிக்கு கொண்டு வர என்ன செய்யப்போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X