சொன்னதைச் செய்த அஜித்.. வியந்து பார்க்கும் சினிமா உலகம்.. ரசிகர்கள் குஷி.. விடாமுயற்சி புது அப்டேட்!
சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெட்யூல் நடைபெற்று வருகின்றது. ஒரு நாளுக்கு 21 மணி நேரம் வேலை பார்க்கின்றார் அஜித் என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அஜித் படம் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வரும் சுரேஷ் சந்திரா இன்று அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் மதியம் 12.07க்கு புதிய அப்டேட் ஒன்றைத் தெரிவிப்பதாக கூறியிருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் குஷியாகினர். ஏற்கனவே விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என கூறப்பட்டு வருகின்றது. அதேபோல் குட் பேட் அக்லி படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.

புது போஸ்டர்: இந்நிலையில், சுரேஷ் சந்திரா மற்றும் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரெடக்ஷன்ஸின் எக்ஸ் பக்கத்தில், விடாமுயற்சி படத்தில் நடித்துள்ள நடிகர் அரோவ் உள்ள போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித், த்ரிஷா மற்றும் அர்ஜுன் ஆகியோரின் போஸ்டர்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆரோவின் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பாராட்டு: ஏற்கனவே துணிவு படத்தின் போதும் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில், அவர்களுக்கான போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. அதேபோல் விடாமுயற்சி படத்திலும் போஸ்டர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். அதேபோல் ஆரவ்-விற்கு தனி போஸ்டர் வெளியிட்டுள்ளதை ரசிகர்கள் தொடங்கி திரை உலகினரும் வியந்து பார்ப்பதுடன் பாராட்டியும் வருகின்றனர்.

தனி போஸ்டர்கள்: வழக்கமாக உச்ச நட்சத்திரங்கள் தங்கள் படங்களில் தன்னைத் தவிர மற்ற நடிகர்களுக்கென தனி போஸ்டர்கள் வெளியிடுவதை விரும்பமாட்டார்கள். அப்படி இருக்கும்போது துணிவு, விடாமுயற்சி படங்களில் அஜித் இவ்வாறு செய்வது சக கலைஞர்களுக்கு அவர் கொடுக்கும் மரி
யாதையை உணர்த்துவதாக பலர் கூறி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











