Vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி டிரைலர், பாடல் செய்த சம்பவம்.. யூடியூப் டிரெண்டிங்கில் No.1!
சென்னை: லைகா தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கி, அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. படம் வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிரைலர் கடந்த 16ஆம் தேதி ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இந்த டிரைலர் தற்போது யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் இந்தப் படத்தின் பாடல் யூடியூப் மியூசிக் கேட்டகரியில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு தியேட்டர்களை அதிரவிட ஆவலோடு காத்துக் கொண்டு இருந்த அஜித்குமார் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட, விடாமுயற்சி படம் சில காரணங்களால் ரிலீஸ் செய்யமுடியவில்லை. இதற்கு காரணம், படத்திற்கு சென்சார் சர்டிஃபிகேட் வாங்கவில்லை எனக் கூறப்பட்டது, மேலும் வெளிநாடுகளிலும் படத்திற்கு சென்சார் வாங்காத காரணத்தால், படத்தினை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யமுடியவில்லை என்ற பேச்சு எழுந்தது.

இப்படியான நிலை நேற்று முன் தினம் படத்தின் டிரைலரை படக்குழு ரிலீஸ் செய்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள், டிரைலர் வேற லெவலில் உள்ளது எனத் தெரிவித்தனர். டிரைலர் பலருக்கும் பிடித்துப் போனது. மேலும் படத்தின் டோனே முழுக்க முழுக்க வித்தியாசமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஹாலிவுட் படங்களின் தரத்திற்கு உள்ளது எனக் கூறினார்கள். படம் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது எனக் கூறியதால், ரசிகர்கள் நாட்களை எண்ணிக்கொண்டு உள்ளார்கள். இதுமட்டும் இல்லாமல், வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அஜித்தின் மற்றொரு படமான, குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
விடாமுயற்சி: இப்படியான நிலையில் விடாமுயற்சி படம் குறித்து படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, பேட்டி ஒன்றில், இந்தப் படத்தில் வித்தியாசமான அஜித்குமாரைப் பார்க்கலாம். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் படத்தின் தன்மை வித்தியாசமானது என்பதால் அஜித் இதில் முற்றிலும் வேறாக இருப்பார். இது வழக்கமான கமர்ஷியல் படம் கிடையாது. எனவே ரசிகர்கள் அதை மனதில் வைத்து படம் பார்க்க வரவேண்டும் எனக் கூறினார்.

டிரெண்டிங்: நேற்று முன் தினம் ரிலீஸ் செய்யப்பட்ட டிரைலர் மொத்தம் 2 நிமிடங்கள் 21 நொடிகள் உள்ளது. இது யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. அதுவும் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, அதாவது ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. மூவீஸ் கேட்டகரியிலும் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் விடாமுயற்சி படத்தின் பாடலான, சவதீகா பாடல் மியூசிக் கேட்டகரியில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் பாடலை இதுவரை 16 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
பிஸ்னஸ்: இந்தத் தகவல் அஜித் ரசிகர்கள் தங்களது இணையதள பக்கத்தில் பகிர்ந்து, கொண்டாடி வருகின்றனர். அதேபோல், படக்குழுவினருக்கும் இந்த தகவல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக இந்தப் படத்திற்கு வெளி நாடுகளில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், பெரிய அளவில் பிசினஸ் ஆகும் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











