Vidaamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி டிரைலர்.. பறக்கும் கார்.. தெறிக்கும் புல்லட்.. ஹாலிவுட் தரம்!

சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த படம் விடாமுயற்சி. இந்தப் படத்தினை மகிழ்திருமேனி இயக்க, லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் மீது ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து, டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியிடப்பட்டது. இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

இப்படியான நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு இன்று அதாவது, ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்துள்ளது.

Ajithkumar Vidaamuyarchi Vidaamuyarchi Trailer

மொத்தம் 2.21 நிமிடங்கள் இருக்கும் இந்த டிரைலர் ஹாலிவுட் தரத்தில் உள்ளது. ஏற்கனவே டீசர் வெர்ஷனுக்கு அனிருத் பின்னணி இசை கலக்கியிருந்தார். அதேபோல் டிரைலருக்கும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார். படம் ஏற்கனவே பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவித்து, அதன் பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால், படத்தைப் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யமுடியவில்லை என அறிவித்தனர். இப்படியான நிலையில் இந்த டிரைலரில் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியைக் குறிப்பிட்டுள்ளனர். படம் வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. விடாமுயற்சி படம் ஹாலிவுட் படமான, பிரேக் டவுன் படத்தின் தழுவல் என கூறப்படுகின்றது.

ajithkumar vidaamuyarchi vidaamuyarchi trailer

விடாமுயற்சி படத்தின் டீசரைப் பார்த்த பலருமே, டீசர் ஹாலிவுட் தரத்திற்கு இருப்பதாகவும், டீசரில் அர்ஜுனின் வில்லத்தனமான சிரிப்பு ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. அதேபோல் அஜித்தின் லுக், த்ரிஷாவின் லுக் என இரண்டுமே பேசுபொருளாக மாறியது. அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகள் அதனை மிகவும் உண்மைத்தன்மையுடையதாக காட்ட ஏதுவான, கேமரா ஆங்கிள் என அனைத்துமே பாராட்டுகளைக் குவித்தது. அதேபோல் டிரைலரும் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகின்றது.

ajithkumar vidaamuyarchi vidaamuyarchi trailer

டிரைலர்: டிரைலரின் தொடக்கத்திலேயே, ஒரு கார் மிகவும் வேகமாக வருகின்றது. அஜித் கையில் ஒரு பையை எடுத்துக் கொண்டு ஒரு நெடுஞ்சாலையில் ஓடுகின்றார். த்ரிஷாவுக்கும் அஜித்துக்குமான காதல் போர்ஷனைக் கொஞ்சம் காட்டுகின்றார்கள். அதன் பின்னர் டிரைலரில் ஒவ்வொருவராக அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோரைக் காட்டுகின்றார்கள்.

ajithkumar vidaamuyarchi vidaamuyarchi trailer

ஹாலிவுட் தரம்: டிரைலரில் அஜித் பேசும் வசனங்களில் மிகவும் கவனமீர்க்கும் வசனமாக, " எனக்கு இந்த ஜெனரேஷன் பற்றி தெரியாது கயல். ஆனா நாங்க சின்ன புள்ளையா இருக்கும்போது வாட்ச் கெட்டுப்போச்சுனா ரிப்பேர் பண்ணுவோம், டிவி கெட்டுப்போச்சுனா ரிப்பேர் பண்ணுவோம், தூக்கி போடமாட்டோம்" எனக் கூறுகின்றார். அதேபோல் டிரைலரில் அஜித் அதிகப்படியான முடியுடன் இருப்பதைப்போன்று ஒரேயொரு ஷாட் வருகின்றது.

ajithkumar vidaamuyarchi vidaamuyarchi trailer

இது அஜித்தானா என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது. அதேபோல், ரெஜினா அஜித்திடம் ' அந்த மாதிரி பொம்பளைங்க வாழவே கூடாது' எனக் கூறுகின்றார். இந்த டயலாக்கும் கவனத்தினை ஈர்த்துள்ளது. டிரைலரில் பெரும்பாலான காட்சிகள் சண்டைகளாக உள்ளது. அஜித் வேகமாக காரில் செல்வதும், ஹாலிவுட் தரத்தில் சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளது, டிரைலரைப் பார்த்தாலே தெரிகின்றது.

ajithkumar vidaamuyarchi vidaamuyarchi trailer
ajithkumar vidaamuyarchi vidaamuyarchi trailer

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X