Vidaamuyarchi: நாளை ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி டிரைலர்.. இந்த தேதியில்தான் படம் ரிலீஸா? ரசிகர்கள் குஷி
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. லைகா புரெடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என கூறப்படுகின்றது. படத்தினை ஏற்கனவே பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து, படத்தினை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யமுடியவில்லை. இந்நிலையில் படத்தின் டிரைலர் நாளை அதாவது ஜனவரி 16ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படம் வரும் பிப்ரவரி, 6 ஆம் தேதி, ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்தத் தகவல் அஜித்குமார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு டிரைலருடன் சேர்ந்து வரும் என கூறப்படுகின்றது.
அஜித்குமார் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி, கடந்த ஆண்டு தீபாவளிக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட படம் விடாமுயற்சி. லைகா நிறுவனத்துடன் அஜித்குமார் இணைந்துள்ள இந்தப் படத்தினை மகிழ் திருமேனி இயக்குகின்றார் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. படத்தினை எப்படியும் ஏதாவது திருவிழாவில் ரிலீஸ் செய்வார்கள் படத்தைக் கொண்டாடி வரவேற்றுவிடலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தனர்.

ஆனால் தீபாவளி, பொங்கல் எல்லாம் வந்து கொண்டு தான் இருந்ததே தவிர படம் குறித்து அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை. இது ரசிகர்களுக்கு அப்செட்டினைக் கொடுக்க, படம் கைவிடப்பட்டதாக எல்லாம் தகவல்கள் இணையத்தில் வெளியாக, படக்குழு தரப்பில் இருந்து படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட காட்சியை வெளியிட்டனர். கோரமான விபத்தில் அஜித் மற்றும் ஆரவ் மாட்டிக் கொண்டது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
விடாமுயற்சி: படம் முழுக்க முழுக்க அஜர்பைஜானில் சூட்டிங் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கு பின்னர் அஜித் கமிட் ஆன, குட் பேட் அக்லி படம் 2025ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் என்ற அறிவிப்புடனே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனால் படத்தினை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு விடாமுயற்சி படக்குழு தள்ளப்பட்டது. கடைசியாக இந்த ஆண்டு பொங்கலுக்கு படத்தினை ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்து மீண்டும் ரிலீஸ் தேதியைக் குறிப்பிடாமல் படக்குழு ஒத்திவைத்தது.
டிரைலர்: இப்படியான நிலையில் படத்தின் டிரைலர் நாளை அதாவது ஜனவரி 16ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தினை வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் வாங்கிய்தாக இன்றுதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இந்நிலையில், படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











