Ajithkumar: மகன் ஆசைப்பட்டுட்டான்! என்னோட உசுருக்காக இது கூட செய்யலனா எப்படி? ஷாலினி இன்ஸ்டா போஸ்ட்!

ஸ்பெயின்: பெரும்பாலான வீடுகளில் மகன்களுக்கு அம்மாவைத்தான் மிகவும் பிடிக்கும், அம்மாக்களுக்கும் மகன்கள் என்றால் கொள்ளை பிரியமாக இருக்கும். இது பெரும்பாலான வீடுகளில் இருக்கும்போது, அஜித் வீட்டில் மட்டும் இல்லாமல் இருக்குமா? அஜித் மனைவி ஷாலினிக்கு அவர்களது மகன் ஆத்விக் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் மகன் தன்னை உரித்து வைத்ததைப் போல் இருந்துவிட்டால் எல்லா அம்மாக்களுக்கும் குஷியோ குஷிதான். தனது மகனின் ஆசைகளை நிறைவேற்ற உலககின் எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் செல்லத் தயங்கமாட்டார்கள். அப்படி தனது மகன் ஆசைப்பட்ட விஷயத்திற்காக சென்னையில் இருந்து ஸ்பெயினுக்கு பறந்துள்ளார் ஷாலினி.

நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி அமர்க்களம் படத்தில் இணைந்து பணியாற்றினர். அந்தப் படம் முடியும் தருவாயில் ஷாலினி மீது அஜித் காதல் வயப்பட்டதைச் சொல்ல, பல கட்டங்களுப்பிறகு இருவருக்கும் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா , கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ajithkumar shalini ajithkumar aadvik ajithkumar

இவர்கள் இருவருக்கும் 2000ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்தது. இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைக்கு அனோஷ்கா அஜித்குமார் என பெயரிட்டனர். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தைக்கு ஆத்விக் அஜித்குமார் எனப் பெயரிட்டனர்.

குடும்பம்: மகள் அனோஷ்கா அஜித்குமாரைப் போல் இருப்பதாகவும், மகன் ஆத்விக் ஷாலினியைப் போல் இருப்பதாகவும் பலரும் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜித்குமார் தனது மகன் ஆத்விக் உடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியானது. அதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் அஜித், விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்தார். அப்போது ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஷாலினிக்கு அருகில் இருந்து அவருக்கு உற்சாகம் கொடுத்தது மகன் ஆத்விக் தான். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

ajithkumar shalini ajithkumar aadvik ajithkumar

கால்பந்து: ஆத்விக் மிகவும் தீவிரமான கால்பந்து ரசிகர் மற்றும் கால்பந்து விளையாடுவதில் அதிக ஆர்வம் உடையவர். தனது பள்ளிகளில் கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் கூட ஒருமுறை இணையத்தில் வெளியானது. மேலும் ஆத்விக் கால் பந்து அணிகளில், ரியல் மேட்ரிட் அணியின் தீவிரமான ரசிகர். இந்த அணி இன்று அதாவது அக்டோபர் 6ஆம் தேதி ரியல் மேட்ரிட் அணி வில்லர் ரியல் அணியுடன் மோதியது. இந்தப் போட்டி ஸ்பெயின் உள்ள சாண்டியாகோ மைதானத்தில் நடைபெற்றது.

புகைப்படம்: இந்தப் போட்டியைக் காண ஆத்விக் உடன் நடிகை ஷாலினியும் ஸ்பெயினுக்குச் சென்று போட்டியைப் பார்த்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த போட்டியில் ரியல் மேட்ரிட் அணி 2 கோல்கள் அடித்தது. வில்லர் ரியல் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. எனவே இந்தப் போட்டியில் ரியல் மேட்ரிட் அணி வெற்றி பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X