Ajithkumar: அஜித்தை கழட்டிவிட்டுட்டு மகனோடு ஜாலியாக இருக்கும் ஷாலினி.. இன்ஸ்டா போஸ்ட்!

ஸ்பெயின்: நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் விடாமுயற்சி. அதேபோல் அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடந்து வருகின்றது. இந்நிலையில் ஸ்பெயினில் அஜித்தின் குடும்பமும் சென்றுள்ளது. வழக்கமாக அஜித்தின் படப்பிடிப்புத் தளங்களுக்கு அவரது குடும்பம் உடன் செல்லாது. ஆனால் இம்முறை சென்றுள்ளதற்கு முக்கிய காரணம் ஸ்பெயினில் நடைபெற்ற ரியல் மேட்ரிட் அணிக்கும் வில்லர் ரியல் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டியைப் பார்க்கத்தான். இந்நிலையில் அங்கு தனது மகனுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை நடிகை ஷாலினி வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலான வீடுகளில் மகன்களுக்கு அம்மாவைத்தான் மிகவும் பிடிக்கும், அம்மாக்களுக்கும் மகன்கள் என்றால் கொள்ளை பிரியமாக இருக்கும். இது பெரும்பாலான வீடுகளில் இருக்கும்போது, அஜித் வீட்டில் மட்டும் இல்லாமல் இருக்குமா? அஜித் மனைவி ஷாலினிக்கு அவர்களது மகன் ஆத்விக் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் மகன் தன்னை உரித்து வைத்ததைப் போல் இருந்துவிட்டால் எல்லா அம்மாக்களுக்கும் குஷியோ குஷிதான். தனது மகனின் ஆசைகளை நிறைவேற்ற உலககின் எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் செல்லத் தயங்கமாட்டார்கள். அப்படி தனது மகன் ஆசைப்பட்ட விஷயத்திற்காக சென்னையில் இருந்து ஸ்பெயினுக்கு பறந்துள்ளார் ஷாலினி. அங்கு எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ajithkumar shalini ajithkumar aadvik ajithkumar

நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி அமர்க்களம் படத்தில் நடித்தனர். அதன் பின்னர் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் 2000ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்தது. இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை, அதன் பின்னர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைக்கு அனோஷ்கா அஜித்குமார் எனவும் ஆண் குழந்தைக்கு ஆத்விக் அஜித்குமார் எனவும் பெயரிட்டனர்.

ajithkumar shalini ajithkumar aadvik ajithkumar

குடும்பம்: மகள் அனோஷ்கா அஜித்குமாரைப் போல் இருப்பதாகவும், மகன் ஆத்விக் ஷாலினியைப் போல் இருப்பதாகவும் பலரும் தெரிவித்தனர். அஜித், விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்தபோது ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஷாலினிக்கு அருகில் இருந்து அவருக்கு உற்சாகம் கொடுத்தது மகன் ஆத்விக் தான். இது தொடர்பான புகைப்படங்களை ஷாலினி வெளியிட இணையத்தில் வேகமாக பரவியது.

புகைப்படம்: ஆத்விக் மிகவும் தீவிரமான கால்பந்து ரசிகர் மற்றும் கால்பந்து விளையாடுவதில் அதிக ஆர்வம் உடையவர். தனது பள்ளிகளில் கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் கூட ஒருமுறை இணையத்தில் வெளியானது. மேலும் ஆத்விக் கால் பந்து அணிகளில், ரியல் மேட்ரிட் அணியின் தீவிரமான ரசிகர். கடந்த 6ஆம் தேதி ரியல் மேட்ரிட் அணி வில்லர் ரியல் அணியுடன் மோதியது. இந்தப் போட்டி ஸ்பெயின் உள்ள சாண்டியாகோ மைதானத்தில் நடைபெற்றது. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் ஸ்பெயினில் நடைபெற்று வருவதால், அங்கு சென்ற ஷாலினி, மகன் அத்விக் அஜித்துடன் கால்பந்து போட்டியைப் பார்க்கச் சென்றனர்.

ajithkumar shalini ajithkumar aadvik ajithkumar

வீடியோ: இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் தற்போது மகன் ஆத்விக் உடன் ஸ்பெயின் வீதிகளில் நடந்து செல்லும்போது எடுத்துக் கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது வேகமாக பரவி வருகின்றது. ரசிகர்கள் பலரும் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக அஜித்தை கழட்டிவிட்டுட்டு மகனுடன் ஷாலினி ஜாலியாக உள்ளார் என கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X