ஏகே 62 படத்துக்கு பிறகு ஓய்வு எடுக்கப்போகிறாரா அஜித்?.. கோலிவுட்டில் தீயாய் பரவும் தகவல்
சென்னை: ஏகே 62 படத்துக்கு பிறகு அஜித்குமார் ஓய்வு எடுக்கப்போவதாகவும் அதனால்தான் இந்தப் படத்தின் மீது அவரது கவனம் அதிகம் குவிந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நேர்கொண்ட பார்வை, வலிமை படஙக்ளுக்கு பிறகு அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி மீண்டும் துணிவு படம் மூலம் இணைந்தது. இவர்கள் கூட்டணியில் வெளியான முதல் இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்ற சூழலில் துணிவு படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனால் அஜித் ஃபார்முக்கு திரும்பிவிட்டார் என ஏகே ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

துணிவின்போதே ஏகே 62ல் கமிட்டான அஜித்
துணிவு படம் நடித்துக்கொண்டிருக்கும்போதே அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் லைகா நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும், விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் திடீரென படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். விக்கி சொன்ன கதை ஒழுங்காக இல்லாததால் அவர் நீக்கப்பட்டார் என கூறப்பட்டது.

ஏகே 62க்குள் உள்ளே வந்த மகிழ் திருமேனி
இதனையடுத்து ஏகே 62 படத்தை விஷ்ணுவர்தன், வெங்கட்பிரபு, ஏ.ஆர்.முருகதாஸ், மகிழ் திருமேனி உள்ளிட்டோரில் யாராவது ஒருவர் இயக்குவார் என தகவல் வெளியானது. ஒருவழியாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குநராக லாக் செய்யப்பட்டிருக்கிறார். குடும்ப பொழுதுபோக்குடன் ஒரு கதையும், ஆக்ஷன் கதையும் மகிழ் திருமேனி கூறியதாகவும் அதில் ஆக்ஷன் கதை டிக் அடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

ஏன் இவ்வளவு தாமதம்?
மகிழ் திருமேனி இயக்குநராக உறுதி செய்யப்பட்டாலும் அதுகுறித்த எந்த அறிவிப்பையும் தயாரிப்பு தரப்பு வெளியிடாமல் இருந்து வருகிறது. அதற்கு காரணமாக, முதலில் இயக்குநரை மற்றும் அறிவிக்காமல் தலைப்புடன் சேர்த்து இயக்குநரை அறிவிக்கலாம் என லைகா திட்டமிட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி லியோ போல் ப்ரோமோவுடன் படத்தின் முதல் அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ட்ரிக்ட்டான அஜித்குமார்
பொதுவாக எந்தப் படத்தின் உள் வேலைகளிலும் அஜித் கலந்துகொள்ளமாட்டார். தன்னுடைய வேலை நடிப்பது என்பதோடு நிறுத்திக்கொள்வார். ஆனால் துணிவு கொடுத்த வெற்றி அவரை கூடுதல் உற்சாகப்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள் திரையுலகை சேர்ந்தவர்கள். எனவே ஏகே 62 கதையில் நிச்சயம் ஏதேனும் பிரமாண்டம் இருக்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆர்டரை இயக்குநர் தரப்புக்கும், தயாரிப்பு தரப்புக்கும் அஜித் கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

அஜித்தின் இந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டருக்கு காரணம் என்ன?
அஜித்தின் இந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டருக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் ஒன்று இப்போது கசிந்துள்ளது. அதாவது, இந்தப் படத்துக்கு பிறகு இரண்டு வருடங்கள் சினிமாவிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் அஜித். எனவே தான் நடிக்காமல் இருக்கப்போகும் இரண்டு வருடங்களுக்கும் பேசும் அளவு இந்தப் படம் இருக்க வேண்டுமென அஜித் விரும்புகிறாராம். மேலும் இந்த இரண்டு வருடங்களில் அவர் ஏகப்பட்ட பைக் ரைடுகளை செய்யப்போவதாகவும் கோடம்பாக்கத்தில் முணுமுணுப்பு எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











