அஜித்,ஷாலினி காதலுக்கு அடித்தளமாக இருந்த ‘அமர்க்களம்‘.. ஸ்பெஷலான நாளில் ரீ ரிலீஸ்!

சென்னை: அஜித் குமாரின் 55வது பிறந்த நாள் வர இருக்கும் நிலையில், அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், அவர் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்ற பெற்ற 'அமர்களம்' மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. சரண் இயக்கிய இந்த படத்தில் அஜித்குமார் மற்றும் ஷாலினி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு விடாமுயற்சி, குட்பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. குட் பேட் அக்லி படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இவரின் அடுத்த படத்தை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்குவார் என்றும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் Anil Sunkara தான் இந்த படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

Ajith Shalini Amarkalam
Photo Credit:

அஜித், ஷாலினி: இந்நிலையில், அஜித் மற்றும் ஷாலினி இணைந்து நடித்த அமர்களம் திரைப்படம் வரும் ஏப்ரல் 24ன் தேதி ரீ ரிலீஸ் ஆக உஉள்ளது. அமர்களம் படப்பிடிப்பின் போது தான் அஜித் மற்றும் ஷாலினி முதன் முதலாக சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இன்று வரை அவர்கள் தமிழ் சினிமாவின் மிகவும் மனம் ஒத்த தம்பதிகளாக இணை பிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். இருவரின் காதலுக்கு அடித்தளமாக அமைந்த இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் ஒன்றாக உள்ளது.

அமர்களம் ரீ ரிலீஸ்: சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான அமர்களம் படத்தில் ரகுவரன், நாசர், ஷாலினி, ராதிகா, வினு சக்ரவர்த்தி, டமு, சார்லி, வையாபுரி, ரமேஷ் கண்ணா, பொன்னம்பலம், அம்பிகா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய அள்ளி வசூல் வெற்றியைப் பெற்றதுடன், ரசிகர்களின் மனதில் ஒரு கல்ட் லவ் ஸ்டோரியாக இடம்பிடித்தது. குறிப்பாக, இந்த படம் அஜித்தின் திரை பயணத்தில் முக்கிய மைல்கல்லாகமாறிது. இதற்கு முன் மென்மையான காதல் கதாபாத்திரங்களில் நடித்துவந்த அஜித், இந்த படத்தின் மூலம் அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக மாறி, தனது திரைமுகத்தை முழுமையாக மாற்றிக்கொண்டார். இதுவே அவரை பின்னர் "மாஸ் ஹீரோ" நிலைக்கு கொண்டு செல்ல முக்கிய காரணமாக மாறியது.

திருமண நாள்: அஜித்தின் 25வது படமான இப்படம் அஜித், ஷாலியின் திருமண நாளான ஏப்ரல் 24ந் தேதி ரீ ரிலீல் ஆக உள்ளது. கார்த்திக் வெங்கடேஷன் தலைமையிலான Sparrow Cinema நிறுவனம் நவீன 4K டிஜிட்டல் வடிவத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X