Good bad ugly box office:வசூல்வேட்டை நடத்தும் குட் பேட் அக்லி.. நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: அஜித்தின் ஃபேன் பாய் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், சிம்ரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் 10ந் தேதி தியேட்டரில் வெளியாகி மாஸ் காட்டி வரும் நிலையில் படத்தின் நான்காம் நாள் வசூல் எவ்வளவு என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

வளர்ந்து வரும் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹிரா, மார்க் ஆண்டனி ஆகிய படத்தை இயக்கினார்.இதில், மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, அஜித்குமாரைக் கதாநாயகனாக வைத்து குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்தார். இப்படத்தி ஆதிக்ரவிச்சந்திரன் அஜித்தின் ஃபேன் பாய்யாகவே ரசித்து ரசித்து பல காட்சிகளை வைத்து இருக்கிறார். மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Good Bad Ugly box office

குட் பேட் அக்லி: அஜித் என்கிற ரெட் டிராகன் கேங்ஸ்டராக இருக்கிறார். இவரின் மனைவியாக வரும் திரிஷாவிற்கு குழந்தை பிறந்த நிலையில், திருந்தி வந்தால் மட்டுமே தன் குழந்தையைத் தொட வேண்டும் என்று தடை விதிக்கிறார். இதனால், அஜித், நான் திருந்தி நல்லவனாகத்தான் உன்னை பார்ப்பேன், உன்னுடை 18வது பிறந்த நாளில் தான் உன்னை சந்திப்பேன் என்று குழந்தை மீது சபதம் எடுத்துவிட்டு, தன் குற்றங்களை ஒப்புக் கொண்டு சிறைக்குச் செல்லும் செல்கிறார். அஜித், பின் 18 ஆண்டுகள் கழித்து விடுதலையாகி தன் மகனை பார்க்க வருகிறார். ஆனால், எதிரிகள் மகன் போதை பொருள் கடத்தலில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பி விடுகின்றனர். தன்னுடைய பழைய எதிரிகளின் வேலை இது என்று களமிறங்கிறார் அஜித். பின்னர் தன் மகனை சிறையில் மீட்டாரா... இல்லையா.. மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா? என்பது தான் குட் பேட் அக்லி படத்தின் கதை.

ஆதிக்கின் ட்ரிக்ஸ்: படத்தின முக்கியமான காட்சியில் பழைய பாடலை வைத்து ஹைப்பை ஏற்றி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். லோகேஷ் கனகராஜ் தான் இதுபோல தனது படத்தில் பழைய பாடலை பயன்படுத்துவார் அதை தற்போது கையில் எடுத்து இருக்கிறார் ஆதிக். இது இந்த படத்தில் பக்காவாக ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. குறிப்பான ஒத்த ரூபாய் தாரேன் பாடலும், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

4 நாள் வசூல்: பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விடாமுயச்சி படம் வெளியான நிலையில், இரண்டாவது படமாக குட்பேட் அக்லி படம் வெளியாகி வசூலில் மாஸ் காட்டி வருகிறது. 'டிராகன்' படம் ரூ. 152 கோடியும், 'விடாமுயற்ச்சி' ரூ. 136 கோடி வசூலித்த நிலையில், இந்த ஆண்டின் வசூலை அள்ளிய மூன்றாவது தமிழ்ப் படம் என்ற பெருமையை குட் பேட் அக்லி படம் பெற்றள்ளது. படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிசில் ரூ 29.25 கோடியும், இரண்டாம் நாள் ரூ.15 கோடியும் சனிக்கிழமை ரூ.19.75 கோடியும், ஞாயிறுக்கிழமையான நேற்று ரூ 20.50 கோடியை வசூலித்து மொத்தம் ரூ.84.50 கோடியை வசூலித்துள்ளது. உலக அளவில் ரூ.155 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X