God bless U Mamae.. அஜித்தின் குட் பேட் அக்லி பட 2வது லுக் போஸ்டர்.. ரிலீஸ் அப்டேட் கொடுத்த படக்குழு

சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களின் சூட்டிங் அடுத்தடுத்து நடந்து வருகிறது. கடந்த மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் துவங்கிய நிலையில், ஹைதராபாத்தில் படத்தின் முதல் கட்ட சூட்டிங்கை அஜித் முடித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் அசர்பைஜானில் மீண்டும் துவங்கியுள்ளது.

தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் இடைவெளி இல்லாமல் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் இறுதி வரை நடக்க உள்ள நிலையில் இதை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்இல் மீண்டும் அஜித் இணையவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில் இன்றைய தினம் படத்தின் 2வது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் தெரிவித்துள்ளனர்.

Ajithkumar Good bad ugly movie Vidaamuyarchi movie

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களின் சூட்டிங் அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் துவங்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து அசர்பைஜானில் நடத்தப்பட்ட நிலையில் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஆறு மாத காலங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்படாமல் படம் முடங்கியது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் அசர்பைஜானிலேயே துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

விடாமுயற்சி சூட்டிங்: இந்த இறுதிக்கட்ட சூட்டிங், அடுத்த மாதம் இறுதிவரை நடத்தப்பட்டு தொடர்ந்து ஹைதராபாத்தில் சில தினங்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டு நிறைவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு தொடர்ந்து ஹைதராபாத்தின் அடுத்தடுத்த ஸ்டுடியோக்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள சூழலில் தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் தன்னுடைய போர்ஷனை முழுமையாக நிறைவு செய்துவிட்டே அடுத்ததாக வரும் ஆகஸ்ட்மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் 2வது ஷெட்யூலில் மீண்டும் அஜித் இணையவுள்ளார்.

குட் பேட் அக்லி பட 2வது போஸ்டர்: விடாமுயற்சி படம் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக நேற்றைய தினம் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இன்று மாலை 6:40 மணிக்கு குட் பேட் அக்லி படத்தின் 2வது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரியில் அஜித்தின் துணிவு படம் ரிலீசான நிலையில் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரது அடுத்த படம் ரிலீஸ் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பொங்கல் ரிலீஸ்: இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு விடாமுயற்சியும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி படமும் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரு மாத இடைவெளியில் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. தன்னுடைய ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றாமல் அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்ய அஜித் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இடையில் தன்னுடைய பேஷனையும் துரத்தி வருகிறார். அவரது அடுத்தடுத்த பைக் வீடியோக்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X