GBU: ‘குட் பேட் அக்லி’ இரண்டாம் நாள் வசூல் வேட்டை.. தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.30.9 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவலை பார்க்கலாம்.
நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. ஆனால், அந்த படத்தில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிலும், ரசிகர்களை கவரும் வகையிலும் இல்லாததால், படம் தியேட்டரில் எடுபடாமல் போனது. இதனால், ரசிகர்கள் அனைவரும், குட் பேட் அக்லி படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ரசிகர்களின் ஹைப்பை அதிகரிக்கும் வகையில் படத்தில் டிரைலரும் பாடல்களும் இருந்ததால், ரசிகர்களுக்கு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. இப்படத்தில், அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சிம்ரன், பிரியா வாரியர், யோகி பாபு, சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

GBU கதை: இப்படத்தில் நடிகர் அஜித், ரெட் டிராகன் என்ற பெரிய கேங்ஸ்டராக இருக்கிறார். ஆனால், அஜித்தின் மனைவியான த்ரிஷாவிற்கு, கேங்ஸ்டர் என்பது தெரியாமல்,திருமணம் செய்து கொண்டார். த்ரிஷாவிற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தனது கணவர் ஒரு கேங்ஸ்டர் என்பது அவருக்கு தெரியவருகிறது. இதனால், த்ரிஷா, இப்படி அப்பா இருப்பது என் மகனுக்கு தெரியக்கூடாது. என் மகனை நீ பார்க்க வேண்டும் என்றால், அவன் கூட இருக்க வேண்டும் என்றால், ஒரு நல்ல அப்பாவாக மாற வேண்டும் என த்ரிஷா சொல்ல, அஜித் தன் மனைவி, குழந்தைக்காக போலீஸில் சரண் அடைந்து ஒரு நல்ல அப்பாவாக மாறுகிறார். தன்னுடைய மகனின் 18 வது பிறந்த நாளுக்காக சிறையில் இருந்து வெளியே வருகிறார் அஜித். அப்போது, அஜித் மகன் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு செல்கிறான்.
இதனால், மனம் உடைந்து போன த்ரிஷா, நீ திரும்பவும் வந்ததால் தான், என் மகனுக்கு பிரச்சனை, அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நீ செய்த பாவத்தால் தான் என் மகனுக்கு இந்த பிரச்சனை என்கிறாள். உன்னால் என் பையன் ஜெயிலுக்கு போய்விட்டான் என்று கதறுகிறாள். அதன் பிறுகு அஜித் மீண்டும் கேங்ஸ்டராக மாறி தன்னோட மகனுக்காக சம்பவம் செய்கிறார். அதன் பிறகு அஜித் மகனை எப்படி மீட்டாரா இல்லையா என்பது தான் குட் பேட் அக்லி படத்தின் கதை.

இரண்டாம் நாள் வசூல்: குட் பேட் அக்லி படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ.30.9 கோடி என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அஜித் படங்களின் முதல் நாளே இப்படி ஒரு வசூலை இந்த படம் தான் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் நாளில் 31 கோடி வரை வசூலித்த இப்படத்தின் இரண்டாம் நாளில் தமிழகத்தில் 13.50 கோடியை வசூலித்துள்ளது. இது முதல் நாள் வசூலில் பாதிக்கு மேல் குறைந்திருக்கிறது. படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











