Ajithkumar Interview - இதுதான் எதிர்காலம்.. அன்றே கணித்த அஜித்.. ஆச்சரிய வீடியோ இதோ
சென்னை: Ajithkumar (அஜித்குமார்) நடிகர் அஜித் பல வருடங்களுக்கு முன்னர் கொடுத்திருந்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
துணிவு படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வி செண்ட்டிமெண்ட்படி இந்தப் படத்தின் பெயர் வைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் படம் ஹிட்டாகும் என்கின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி மகிழ் திருமேனியும் மிகச்சிறந்த இயக்குநர் என்பதால் நிச்சயம் ஒரு சூப்பர் ஹிட் படத்தை எதிர்பார்க்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

உலக சுற்றுப்பயணம்: அஜித் தனது முதல்கட்ட வேர்ல்ட் டூரை அண்மையில் தொடங்கினார். நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் ரைட் செய்த அவர் சில மாதங்களுக்கு முன்பு பயணத்தை முடித்து சென்னை திரும்பினார். அதேபோல் அஜித் தனது அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் எனவும் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இதற்கிடையே அஜித் சென்னை திரும்பிவிட்டதால் விடாமுயற்சி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
விடாமுயற்சியில் பிரச்னை: அதன்படி கடந்த மே மாதம் ஷூட்டிங் என கூறப்பட்டது. ஆனால் தொடங்கப்படவில்லை. இதனையடுத்து ஜூன் மாதம் என கூறப்பட்டது. லைகாவில் நடந்த அமலாக்கத் துறை சோதனை காரணமாக அஜித் லைகாவுக்கு பதில் வேறு ஒரு நிறுவனத்துக்கு விடாமுயற்சி படத்தில் நடிக்கலாம் என்ற யோசனையில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை என திரைத்துறை வட்டாரம் கூறுகிறது.
எப்போது ஷூட்டிங்?: இந்தச் சூழலில் விடாமுயற்சியில் இருந்த அத்தனை சிக்கல்களும் தீர்ந்துவிட்டதாகவும்; விரைவில் அதாவது ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே இதில் த்ரிஷா நடிப்பதாக இருந்ததாகவும்; ஆனால் அவர் இப்போது விலகிவிட்டார் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் வீடியோ: இந்நிலையில் பத்திரிகைகளுக்கு பேட்டி எதுவும் கொடுக்காத அஜித் பல வருடங்களுக்கு முன்னர் கொடுத்த பேட்டி தொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியிருக்கும் அஜித், "மக்கள் இப்போது பொழுதுபோக்கிற்க்காக வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே நேரம் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள். அனைவரும் அவசரமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
டி20தான் இனி: உதாரணமாக கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் வந்தது. பிறகு ஒரு நாள் போட்டி வந்தது. இப்போது டி20 போட்டி வந்திருக்கிறது.எதிர்காலத்தில் டி20 போட்டிகளோ அல்லது டி 10 போட்டிகளோத்தான் கிரிக்கெட்டில் பிரபலமாக இருக்கும். இதுபோன்ற பல மாற்றங்கள் நிகழும்" என கூறியிருக்கிறார். அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து, ஏகே சொன்னதுபோல் இன்று டி 20 கிரிக்கெட் போட்டிதான் பிரபலமாக இருக்கிறது. இதை அன்றே கணித்துவிட்டார் எங்கள் அஜித் என பதிவிட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











