»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் அஜீத் - நடிகை ஷாலினி திருமணம் மே 24-ம் தேதி (திங்களன்று) காலையில் சென்னை ஓட்டலில் எளிமையாக முடிந்தது.

பெற்றோர்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டு, இந்துமுறைப்படி திருமாங்கல்யம் அணிந்து கொண்டார் ஷாலினி.

அமர்க்களம் என்ற திரைப்படத்தில் காதலர்களாக நடித்தபோது இருவரும் உண்மை காதலர்கள் ஆகினர். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்தனர். இருவரது பெற்றோர் ஆசியுடன் இவர்களது திருமணம் திங்களன்று காலை 10 மணியளவில் ஓட்டல் கன்னிமராவில் நடந்தது.

மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் காலை 7.30 மணிக்கு ஓட்டலுக்கு வந்தனர். அங்கிருந்து பெற்றோர்களுடன் அருகில் உள்ள கதீட்ரல்தேவாலயத்திற்கு சென்றனர். அங்கு பாதிரியாரிடம் ஆசி பெற்றுக் கொண்டு 9.45 மணிக்கு ஓட்டலுக்கு திரும்பினர். அங்கு அமைக்கப்பட்டிருந்தமணமேடையில் இருவரும் 10 மணியளவில் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டனர். பின்னர் இந்து முறைப்படி மணமகளுக்குதிருமாங்கல்யம் அணிவித்தார் அஜீத்.

திருமண பதிவாளரை ஓட்டலுக்கு வரவழைத்து திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். மாலை 4.30 மணியளவில் அதே ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சிநடைபெறுகிறது. இதில் திரையுலகத்தினர் கலந்து கொள்கின்றனர்.

Read more about: ajithshlini, chennai, tamilnadu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil