பத்ம பூஷன் வேண்டாம்.. புண்ணியமே போதும்.. அஜித் சகோதரர் இப்படி சொல்லிட்டாரே ப்பா

சென்னை: அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அவரது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றாலும்; பொதுவான ரசிகர்களை படம் கவரவில்லை. அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்புராஜ் அல்லது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்றுதான் அவர் பத்மபூஷன் விருதினையும் பெற்றுக்கொண்டார். அஜித்துக்கு பத்ம பூஷன் விருது கிடைத்தது அவரது ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விருதினை பெறுவதற்காக தனது மனைவி, மகன், மகள், சகோதரர் ஆகியோருடன் டெல்லிக்கு நேற்று சென்றிருந்தார் ஏகே. இந்நிலையில் அஜித் பத்ம பூஷன் விருது பெற்றது தொடர்பாக அவரது சகோதரர் அனில்குமார் மனம் திறந்து பூரிப்புடன் பேசியிருக்கிறார்.

அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த வருடத்தில் அவரது இரண்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் முதலில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த அடியை அந்தப் படம் வாங்கியது. மகிழ் திருமேனி முதன்முறையாக அஜித்தை வைத்து இயக்கியதால் கண்டிப்பாக படம் பந்தயம் அடிக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அஜித்துக்கான மாஸ் சீன்கள் எதுவுமே இல்லையே என்று அவர்கள் நொந்துகொண்டார்கள்.அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. அதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.மேலும் பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள்.

Ajith s brother Anil Kumar has spoken about his winning the Padma Bhushan award

கலவையான விமர்சனம்தான்: குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு சீனிலும் ஏகே மாஸ் காண்பித்திருக்கிறார்; ஆதிக் தான் அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்பதை நிரூபித்துவிட்டார் என ரசிகர்கள் கூறுகிறார்கள். படமும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து கெத்து காண்பித்திருக்கிறது. இருப்பினும் படம் பார்த்த பொதுவான ரசிகர்கள் குட் பேட் அக்லியை கழுவி ஊற்றுகின்றனர். அதாவது இதில் கதையே இல்லை எப்படி இந்தப் படத்தை ஆதிக் எடுத்தார் என்று கூறுகிறார்கள் அவர்கள்.அதுமட்டுமின்றி ரெட்ரோ பாடல்களை ரீ க்ரியேட் செய்கிறேன் என்கிற பெயரில் கெடுத்துவைத்துவிட்டார் இயக்குநர். முக்கியமாக அஜித்தின் பழைய பட சீன்களை ரெஃபரன்ஸ்களாக வைத்து ஒப்பேத்திவிட்டார் என்றெல்லாம் சரமாரியாக விமர்சனத்தை முன்வைத்தார்கள்.

கார் ரேஸில் அஜித்: இதற்கிடையே இந்த வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியானதற்கு காரணமே கார் ரேஸ்தான்.முதலில் துபாயில் நடந்த கார் ரேஸில் தனது ரேஸிங் டீமோடு கலந்துகொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார் ஏகே. அடுத்ததாக ஸ்பெய்ன் உள்ளிட்ட நாடுகளில் பங்கேற்ற கார் ரேஸ் போட்டிகளிலும் அவரும் அவரது டீமும் வெற்றி வாகை சூடினார்கள். இனிமேல் கார் ரேஸ் நடக்கும் காலகட்டத்தில் எந்தப் படத்திலும் நடிக்கமாட்டேன் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சினிமாவிலிருந்து விஜய் விலகவிருக்கும் நிலையில் அஜித்தும் இப்படி கூறியிருப்பது ஒட்டுமொத்த 90ஸ் கிட்ஸ்களுக்கும் பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

Ajith s brother Anil Kumar has spoken about his winning the Padma Bhushan award

பத்ம பூஷன் அஜித்: சூழல் இப்படி இருக்க அஜித்துக்கு ஒன்றிய அரசு பத்மபூஷன் விருதினை அறிவித்திருந்தது. அந்த விருது கொடுக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. அதில் தனது மனைவி, மகன், மகள், சகோதரருடன் கலந்துகொண்ட அஜித்குஜ்மார், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து அந்த விருதினை பெற்றுக்கொண்டார். பத்மபூஷன் விருது பெற்ற அஜித்துக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்.சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொள்ளும் மைண்ட் செட்டில் அஜித் இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால் தங்கள் ஏகே பத்ம பூஷன் விருதினை பெற்றிருப்பதை நினைத்து உச்சக்கட்ட சந்தோஷத்தையும் அடைந்திருக்கிறார்கள் அவர்கள்.

அனில்குமார் பேட்டி: இந்நிலையில் அஜித்தின் பத்ம பூஷன் விருது பெற்றது தொடர்பாக அவரது சகோதரர் அனில் குமார் மனம் திறந்து பேசியிருக்கிறார். ரெட் நூல் என்ற யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் பேசுகையில், "எங்கள் குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய பெருமை கிடைத்திருக்கிறது.நான்தான் அஜித்தின் தம்பி என்று மக்களில் பலருக்கு தெரியாது. எனக்கு அஜித் மட்டும் அண்ணன் இல்லை. இன்னொரு அண்ணனும் இருக்கிறார். எனக்கு மொத்தம் இரண்டு அண்ணன்கள். அஜித்துக்கு பத்ம பூஷன் அறிவித்த பிறகு எனது க்ளைண்ட் ஒருவர் என்னிடம், 'வாழ்த்துகள் ஜி. உங்கள் அண்ணனுக்கு பத்ம பூஷன் கிடைத்திருக்கிறது. உங்களுக்கும் கிடைக்க வாழ்த்துகள்' என்று கூறினார். ஆனால் நானோ அவரிடம், எனக்கு பத்ம பூஷன் வேண்டாம் ஜி. புண்ணியம் கிடைத்தாலே போதும் என்றுதான் கூறினேன்.

அவ்வளவு திட்டுக்கள் கிடைத்தன: நாங்கள் மிடில் கிளாஸ் குடும்பமாகத்தான் இருந்தோம். அஜித்குமார் படிப்பை விட்டுவிட்டு மெக்கானிக் வேலையை தேர்ந்தெடுத்தார். யாராவது இப்படி செய்வார்களா?.. அவ்வளவு திட்டுக்கள் கிடைத்தன. எனது அப்பா மலையாளி இல்லை. தமிழன்தான். பாலக்காடு தமிழ் அவர். அம்மா வட இந்தியர்தான். அம்மா ஹிந்தி என்பதால் சில சமயங்களில் என்னை கிண்டல் செய்வார்கள். அவர்கள் எல்லாம் ஃப்ரீயாக இருக்கிறார்கள் அதனால் ட்ரோல் செய்கிறார்கள் என்று நான் நினைத்துக்கொள்வேன். என்னை பொறுத்தவரை நான் மனதில் பட்டதை பேசிவிடுவேன். ஏனெனில் எனது அப்பாவும் அப்படித்தான் பேசுவார். நான் என்னுடைய தந்தையின் மகன்தானே. அப்படி இருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. அஜித்தும் அப்படித்தான்.

மென்ட்டல் ஹெல்த்தை பார்க்க வேண்டும்: மென்ட்டல் ஹெல்த் ரொம்பவே முக்கியம். எனக்கு விளையாட்டின் மீது அதீத ஆர்வம் இருந்தது. அப்போதெல்லாம் ஓடி விளையாடுவதற்கு ஏகப்பட்ட இடங்கள் இருந்தன. இப்போது எல்லா இடத்திலுமே ப்ளாட்கள் வந்துவிட்டன. நாங்களும்கூட டீன் ஏஜீல் ப்ளாட்டுக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டோம்தான். கல்லூரி காலத்தில் நான் ஃபிட்டாக இருந்தேன்.நான் சிறு வயதில் சென்னையில் வளர்ந்தேன். நான் தமிழ் பேசும்போது எனது உறவினர்கள் எல்லாம் சிரிப்பார்கள். மேல் படிப்புக்காக நான் அமெரிக்கா சென்றுவிட்டேன்.அப்போதுதான் எனக்கு ஒன்று தோன்றியது. அதாவது தமிழ்நாட்டில் இருக்கும்போதே எனக்கு தமிழ் சரியாக வராது. இப்போது அமெரிக்கா வேறு சென்றுவிட்டால் சுத்தமாக போய்விடும். அதனால் அங்கிருந்து அம்மாவுடன் ஃபோனில் பேசும்போது ஹிந்தி மற்றும் தமிழில் பேசுவேன். பிறகு சென்னையிலேயே தொழிலை ஆரம்பித்தேன். அப்போது நண்பர்கள் மற்றும் எனது ஸ்டாஃபுகளுடன் தமிழ், ஹிந்தி மொழிகளில் அடிக்கடி பேசுவேன். அதன் காரணமாக தமிழ் எனக்கு தற்போது நன்றாக வருகிறது. இப்போது தைரியமாக தமிழில் பேட்டியே கொடுக்கிறேன்" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X