விடாமுயற்சி எப்படி இருந்தா என்ன? ஜெயித்தாலும் தோற்றாலும் கூடவே இருப்போம்.. அஜித் ரசிகர்கள் பேட்டி!

சென்னை: அஜித்குமார் நடித்த 'விடாமுயற்சி'. பல பிரச்சனைகளை கடந்து இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ளது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க அஜித்குமார், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இரண்டு ஆண்டுக்கு பின் அஜித்தின் படம் வெளியானதை அவரது ரசிகர்கள், கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர்.

தியேட்டரில் படம் பார்த்த ரசிகர் ஒருவர், அல்டிமேட் ஸ்டார், பத்மபூஷன் அஜித் குமார் அனைவருக்குமே பெருமை சேர்த்து இருக்கிறார். ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்குமே அஜித் குமார் பெருமை சேர்த்து இருக்கிறார். அவர் ஒரு நடிகருக்கும் மேலாக இருக்கிறார். நாங்கள் அஜித்குமார், நடிகர் என்பதற்காக ரசிகராக இல்லை, அஜித் குமார் என்கிற ஒரு நல்ல மனிதனின் ரசிகர்கள் நாங்கள். அவர் எப்போதுமே தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசி எங்களை ஊக்கப்படுத்தி வருகிறார். அஜித் சாரின் படம் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற எந்தவித எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை. அவர் ஜெயித்த போதும் அவருடன் இருந்தோம், அவர் தோற்ற போதும் அவருடன் இருந்தோம். எப்போதும் அவருடன் இருப்போம். இப்போது இருக்கும் கூட்டம் இன்னும் 20 வருடம் ஆனாலும் அவருக்கு இருக்கும் என்றார்.

vidaamuyarchi ajithkumar fans

படம் எப்படி இருந்தா என்ன: தல அஜித்தின் படத்தை தியேட்டரில் பார்த்து இரண்டு வருஷம் ஆச்சு, அஜித்தை தியேட்டர்ல பார்த்தா போதும், விடாமுயற்சி படம் எப்படி இருக்கு என்பது முக்கியம் இல்லை, அவரை திரையில் பார்க்க வேண்டும், அதை கொண்டாட வேண்டும் அவ்வளவு தான். அஜித், திரிஷா சேர்ந்து நடித்த எல்லா திரைப்படத்திலும் காதலிப்பார்கள் அதனுடன் படம் முடிந்துவிடும். ஆனால், இந்த திரைப்படத்தில் அஜித் திரிஷாவும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க அதுக்காகவே இந்த திரைப்படத்தை பாக்கலாம். அஜித்தின் படம் தியேட்டரில் வரவில்லை என்றாலும், அங்க அவருடைய படத்தை வீட்டில் பார்த்தோம், அவரின் ரேஸ் பார்த்தோம் என்ற ஒரு ரசிகர் நெகிழ்ந்து பேசினார்.

பெருமையா இருக்கு : பெண் ரசிகை ஒருவர், படம் எப்படி இருக்குனு கேட்காதீங்க, படம் எப்படி இருந்தாலும் நாங்க திரையில் அஜித்தை பார்க்க வருவோம். அவர் கார் ரேசுக்கு சென்றுவிட்டாலும், எங்களுக்காக சினிமாவில் நடிப்பார். இவர் ரேசில் ஜெயித்து எங்கள் குடும்பத்தில் ஒருவர் ஜெயித்தது போல இருக்கு. என் அண்ணன் ஜெயித்தா நான் எவ்வளவு பெருமைப்படுவேனோ, அவ்வளவு பெருமையாக இருக்கு. அவர் நடித்த படம் பிளாப் ஆனாலும், ஹிட்டானாலும் எங்க அண்ணன் அண்ணன் தான் என்றார்.

ஆட்டம் போட்ட ரசிகர்கள்: மற்றொரு ரசிகை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்பதற்காக லீவ் போட்டுவிட்டு படம் பார்த்தேன். சொல்வதற்கே எதுவும் இல்லை அஜித்தை திரையில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அஜித், த்ரிஷா ஜோடி சூப்பர், அதுவும் சாவேரிக்க பாட்டு மிகப்பெரிய வைப்பாக இருந்தது. அந்த பாடலை பார்த்துட்டு தியேட்டர்ல ஆடாத ஆட்கள் இல்லை. இன்றைய டிரெண்டுக்கு ஏற்றமாதிரி செம வைப் பாடலாக இருக்கிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X