Ajithkumar: அஜித்தோட அந்த மனசு.. பாராட்டிய மாமனார்.. பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் அஜித்குமார் 30 ஆண்டுகளை தாண்டி தன்னுடைய சினிமா கேரியரில் சிறப்பாக பயணித்து வருகிறார்.

எந்தவிதமான சப்போர்ட்டும் இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் தானே செதுக்கியுள்ளார்.

அடுத்ததாக அவரது விடாமுயற்சி படத்தின் சூட்டிங் இந்த மாதம் இறுதியில் மலேசியாவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ajiths father-in-law hails about his Character in his recent interview

தனிப்பட்ட வாழ்க்கையில் அஜித்தின் குணம் குறித்து பகிர்ந்த அவரது மாமனார் ஏஎஸ் பாபு: நடிகர் அஜித் தன்னுடைய திரைப்பயணத்தை தமிழில் அமராவதி படத்தில் துவங்கினார். தொடர்ந்து ஆசை, அமர்க்களம், வாலி என அசத்தலான படங்களை கொடுத்துள்ள அஜித்தின் கேரியர் இந்திய அளவில் கடந்த 30 ஆண்டுகளை கடந்து சிறப்பான நடந்து வருகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

கடந்த ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியான அஜித்தின் துணிவு படத்தில் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு காட்சிகள் அமைந்திருந்தன. அதிரடி ஆக்ஷன் களத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பும் வசூலும் அமைந்திருந்தது. இந்நிலையில் அடுத்ததாக அஜித்தின் ஏகே62 படமான விடாமுயற்சியின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதிக்குள் இந்தப் படத்தின் சூட்டிங் மலேசியாவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில், தொடர்ந்து சூட்டிங் தள்ளிப் போனது. இதனால் அஜித் ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் ஒருவழியாக படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நடிகராக மட்டுமில்லாமல் பைக் பயணத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக உள்ள அஜித், உலகளவில் பைக் டூரை திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

நடிகராக பல ஆண்டுகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள அஜித், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அதிகமான உதவிகளை செய்து வருகிறார். மிகச்சிறப்பான வாழ்க்கை முறைகளை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், சிறப்பான தந்தையாகவும் நல்ல கணவனாகவும் இவரை காண முடிகிறது. ஆனால் நடிப்பு தவிர்த்து தன்னை பொதுவெளியில் அதிகமாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் உள்ளார் அஜித்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மாமனார் ஏஎஸ் பாபு தன்னுடைய மருமகனின் உயர்ந்த உள்ளம் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். வீட்டிற்கு யார் வந்தாலும் முதலில் தண்ணீர் கொடுத்து பின்பு சாப்பாடு பரிமாறுவது வரை அஜித் செய்வார் என்றும் வேலையாட்களை குடும்ப உறுப்பினர் போல நடத்துவார் என்றும் அவர் பாராட்டியுள்ளார். மேலும் அவருடன் பழகும் அனைவருக்கும் அவரின் இந்த பாசிட்டிவிட்டி பரவி அவரை போல மற்றவர்களிடம அன்பாக இருக்க வைக்கும் என்றும் கூறியுள்ளார்.

Ajiths father-in-law hails about his Character in his recent interview

அஜித்திற்கும் ஷாலினிக்கும் திருமணத்தின்போது ஜாதகம் பார்த்தபோது 10 பொருத்தங்களும் சிறப்பாக அமைந்திருந்ததாகவும் அதற்கேற்ப மிகவும் பிரியமான ஜோடியாக இவர்கள் காணப்படுவதாகவும் கூறியுள்ள பாபு, அஜித் தனக்கு மருமகன் இல்லை, மகன் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். திருமண நிச்சயத்தின்போது எப்படி மகிழ்ச்சியாக இருந்தோமோ அதே போல தற்போதுவரை இருப்பதாகவும் அஜித், இரு குடும்பங்களையும் அந்த அளவிற்கு தாங்குவதாகவும் கூறியுள்ளார்.

அவரது இந்த பேட்டி பிரபல வார இதழில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அஜித் குறித்த அவரது மாமனாரின் இந்த பேட்டி குறித்த பதிவுகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளார். மேலும் அஜித் குறித்த அவரது மாமனாரின் பேட்டியின் சிறப்பம்சங்களையும் தன்னுடைய ட்விட்டர் பதிவில் அவர் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த மூன்று பதிவுகளை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X