'I Am Waiting' விஜய்யின் மாஸ் டயலாக்.. தியேட்டரை அலறவிட்ட அஜித்.. கொண்டாடும் ஃபேன்ஸ்!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. தியேட்டரில் அஜித் ரசிகர்கள் அலப்பறை செய்து படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் விஜய் பேசும் வசனத்தை அஜித் பேசி இருப்பதால், இப்படம் விஜய் ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தி உள்ளார்.

துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடித்த எந்த படமும் வெளியாகதால் ரசிகர்கள் மிகவும் கவலையுடன் இருந்த நிலையில், இந்த ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் வெளியானது. ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் தழுவலுடன் உருவான இந்த படம் மாஸ் மசாலா படமாக இல்லாமல் ஒரு சாதாரணமான படமாக இருந்ததால், அஜித் ரசிகர்கள் அப்செட்டானார்கள். இதனால் இந்த படம் தியேட்டரில் பெரிதாக எடுபடாமல் போது. இதையடுத்து, மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் முதன் முறையாக அஜித்துடன் கை கோர்த்துள்ளார். அந்த படத்தில்., த்ரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில், ரெட்டின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு பாடல் வெளியாகி டிரெண்டானது.

Ajith kumar Good Bad Ugly Vijay

கொண்டாடிய ரசிகர்கள்: குட் பேட் அக்லி படம் இன்று தியேட்டரில் வெளியான நிலையில் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காலை 9 மணிக்கு படம் வெளியானதால், அஜித் ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசு வெடித்து ஆட்டம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் படத்தின் மாஸ் காட்சிகளை ட்விட்டரில் வெளியிட்டு அலப்பறை செய்து வருகின்றனர். அந்த வகையில், இந்த படத்தில் அஜித்குமார், துப்பாக்கி படத்தில் வரும் மாஸ் வசனமான 'I Am Waiting' என்ற டயலாக்கை பேசி உள்ளார். துப்பாக்கி படத்திலும் இந்த வசனம் இடைவேளை நேரத்தில் தான், அதே போலத்தான் இந்த படத்தில் அந்த வசனத்தை அஜித் இன்டர்வெல் சீனில் பேசி இருக்கிறார். இதை அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களையும் கவர்ந்து விட்டதால், இணையத்தில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

Ajith kumar Good Bad Ugly Vijay

இரண்டு ரசிகர்களும் குஷி: அண்மையில் வெளியான கோட் படத்தில் மங்காத்தா படத்தின் பிஜிஎம் இடம் பெற்று இருந்தது. அது மட்டுமில்லாமல், அந்த படத்தில் அஜித் ஒரு இடத்தில் 'இனிமே குடிக்கவே கூடாதுடா' என்று தலையை பிடித்துக்கொண்டு சொல்லி இருப்பார். அந்த காட்சியை கோட் படத்தில் வெங்கட் பிரபு வைத்து இருப்பார். அது போல லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் டேபிள் மீது கால் போட்டு அமர்ந்து இருக்கும் காட்சி போல இந்த படத்திலும் ஒரு காட்சி வருகிறது. இதையெல்லாம் பார்த்த அஜித்,விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். வழக்கமாக அஜித் படம் வெளியானால் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்வார்கள், விஜய் படம் வெளியானால் அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்வார்கள். ஆனால், இந்த படத்தில் அஜித் பேசிய 'I Am Waiting' வசனத்தால் குஷியாகிப் போன விஜய் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை கொண்டாடத் தொடங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X