குட் பேட் அக்லி முதல் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. பட்டையை கிளப்பும் டீசர் மேக்கிங் வீடியோ

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கடைசியாக நடித்தார் அஜித்குமார். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு பெரிய வரவேற்பு கிடைத்த சூழலில்; தற்போது டீசர் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதோடு முதல் சிங்கிள் ரிலீஸாகும் நாளையும் அறிவித்திருக்கிறது.

துணிவு படத்துக்கு பிறகு அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க; லைகா நிறுவனம் தயாரித்தது. அஜித்துடன் திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் ரசிகர்களை முழுவதுமாக கவரவில்லை. விமர்சன ரீதியாகத்தான் படம் அப்படி இப்படி இருந்தது என்றால் வசூல் ரீதியாகவும் அடி வாங்கியது. சரி தியேட்டர் ரெஸ்பான்ஸ்தான் ஒழுங்காக கிடைக்கவில்லை; ஓடிடியில் ரெஸ்பான்ஸ் பாசிட்டிவ்வாக இருக்கும் என்று கருதிய ரசிகர்களுக்கு அப்போதும் ஏமாற்றமே கிடைத்தது.

Ajith s Good Bad Ugly Teaser Making Video Out Now

குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சி நடித்துக்கொண்டிருந்தபோதே குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் ஏகே. எப்போதும் ஒரு படத்தை முடித்து சில மாதம் ரெஸ்ட் எடுத்து அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்லும் அஜித் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொள்வதற்காகவே ஒரே நேரத்தில் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து முடித்தார் என்று குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை தரும் ஆதிக் ரவிச்சந்திரன்: திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து அவர் இயக்கிய அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படமும் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார் ஆதிக். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் கொண்டாடப்பட்டது. இதனால் குட் பேட் அக்லிக்கும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் ஆதிக் நடித்தபோது அவர் மீது அஜித்துக்கு நம்பிக்கை வந்ததால்தான் இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒத்துக்கொண்டார்.

Ajith s Good Bad Ugly Teaser Making Video Out Now

பட்டையை கிளப்பிய டீசர்: படமானது ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அண்மையில்தான் படத்தின் டீசர் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது உச்சக்கட்ட நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. கண்டிப்பாக ஆதிக் இந்தப் படத்தில் தரமான சம்பவம் செய்யப்போகிறார் என்று உறுதிபட கூறியிருக்கிரார்கள். முதலில் இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்தது . ஆனால் சில காரணங்களால் அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். பல வருடங்களுக்கு பிறகு அஜித் படத்துக்கு ஜிவி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டீசர் மேக்கிங் வீடியோ: இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த மேக்கிங் வீடியோவில் அஜித் படு உற்சாகமாக காணப்படுகிறார். அதேபோல் இயக்குநர் ஆதிக் சொல்வதையும் கவனமாக கேட்டு அதன்படியே நடித்து கொடுத்திருக்கிறார். ஆதிக்கும் ரொம்பவே மகிழ்ச்சியாகவும், ஜாலியாகவும் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என்பது டீசர் மேக்கிங் வீடியோவை பார்க்கையில் உறுதியாகியிருக்கிறது. இந்த டீசர் வீடியோ பயங்கர்மாக ட்ரெண்டாகியிருக்கிறது.

அதேபோல் ரசிகர்களுக்கு இந்த டீசர் வீடியோவோடு ஒரு சர்ப்ரைஸையும் கொடுத்திருக்கிறது படக்குழு. அதாவது படத்தின் முதல் சிங்கிள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. தற்போது அதன் தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி முதல் பாடலானது மார்ச் 18ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X