Ajith - அட செமயா செய்றாரேப்பா.. அஜித் பிரியாணி செய்றத பாருங்க.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் நடித்த துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக அதே உற்சாகத்தோடு அடுத்த படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறார். சூழல் இப்படி இருக்க அஜித் இப்போது பைக் டூர் சென்றிருக்கிறார்.
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அவர். தடையறத்தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கிவருகிறார். திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் கமிட்டாகியிருக்கின்றனர். அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி ரொம்பவே மும்முரமாக நடந்துவருகிறது. அஜித்தும் முழு ஒத்துழைப்பை கொடுத்துவருகிறார்.

என்ன கதை?: இப்படத்தில் அஜித்தும், திரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும்; அவர்கள் இருவரும் ஒரு வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்வார்கள் அப்போது திரிஷா கடத்தப்பட்டுவிடுவார். அவரை அஜித் மீட்பதுதான் ஒன்லைன் என்கிறார்கள் கோலிவுட்டினர். மகிழ் திருமேனி திரைக்கதை அமைப்பதில் கில்லாடி என்பதால் கண்டிப்பாக பக்கா ஆக்ஷன் படம் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரெடி என்று இப்போதே கூறிவருகிறார்கள் அஜித்தின் ரசிகர்கள்.
அடுத்த லொக்கேஷன் எங்கே?: அதேபோல் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எங்கு ஷூட்டிங் நடக்கும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி ஒன்று சென்னையில் செட் போட்டு படமாக்குவார்கள் இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது. படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு மூச்சோடு வேலை செய்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அஜித்துக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் விடாமுயற்சியின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

பிரியாணி செய்யும் அஜித்: சூழல் இப்படி இருக்க அஜித் இப்போது பைக்கை எடுத்துக்கொண்டு டூர் சென்றிருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோர் சென்றிருக்கிறார்கள். டூரின்போது சக ரைடர்களுக்கு பைக் ஓட்ட சொல்லிக்கொடுத்தது, ஸ்னூக்கர் விளையாடியது என அஜித் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தார். இந்நிலையில் இன்று புதிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் தன்னுடன் வந்த ரைடர்களுக்கு அஜித்குமார் மணக்க மணக்க தன் கைப்பட பிரியாணி செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அட அஜித் பிரியாணி செய்வதை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுதே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முன்னதாக அஜித்குமார் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு தொடர்ந்து பிரியாணி செய்து போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். மங்காத்தா படத்திலிருந்து ஆரம்பித்த அஜித்தின் இந்தப் பழக்கம் இத்தனை வருடங்களாக தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லி: இதற்கிடையே திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 63ஆவது படத்தை இயக்குகிறார். படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸாகவிருக்கிறது. இதன் அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது.


Click it and Unblock the Notifications











