சிங்கம் களம் இறங்கிடுச்சு.. அஜித்தோடு போட்டி போடுவது யார் தெரியுமா? . கார் ரேஸில் அசுர வேகம்

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனிடையே துபாய் மற்றும் ஐரோப்பாவிலும் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் இத்தாலியில் நடந்த கார் ரேஸில் அவரது அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தது. இதற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். அவரது ரசிகர்கள் குதூகலம் அடைந்தனர். இந்நிலையில், தற்போது அஜித்தின் புதிய வீடியோ ஒன்று வெளியானதை பார்த்து அஜித் ரசிகர்கள் மெர்சல் அடைந்துள்ளனர்.

அஜித். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தல் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தில் அஜித் பல கெட்டப்புகளில் இருப்பது போன்ற டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் 1500 திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன. மேலும் படம் 1000 கோடி வசூலை தொடும் அளவிற்கு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அடுத்தடுத்து லைன் அப்பில் படங்களில் கமிட் ஆகியிருக்கும் அஜித் அவருக்கு பிடித்த கார் பந்தயங்களிலும் கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.

ajiths-son-aadvik-prepares-for-car-racing

கடந்த மாதம் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் கலந்துகாெண்ட அவரது 3ஆம் இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. இதற்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வரும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது பேசிய அஜித், முதலில் எனது குடும்பத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் இல்லையென்றால் நான் இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை. உங்களது இலக்கை நோக்கி செல்லுங்கள் என ரசிகர்களுக்கும் அட்வைஸ் செய்திருந்தார். அப்போது அவரது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம், வீடியோக்கள் வைரலானது.

கார் விபத்து: போர்ச்சுகல் நாட்டில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்க சென்றபோது அஜித் கார் விபத்தில் சிக்கினார். அதுகுறித்த வீடியோக்களும் வெளியாகின. இதைத்தொடர்ந்து அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, இத்தாலியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டது. இத்தாலியின் Mugello Circuitல் நடந்த 12எச் ரேஸில் அவர் அணி பங்கேற்றது. இதில் அஜித் அணி GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்தார். கிரிக்கெட்டிற்கு தோனி, ரேஸிற்கு அஜித் என்ற அடையாளத்தை பிடித்துள்ளார்.

ajiths-son-aadvik-prepares-for-car-racing

மகன் ஆத்விக்: தற்போது அஜித்தை போன்று அவரது மகன் ஆத்விக்கும் கால்பந்து, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார். சமீபத்தில் அவர் படிக்கும் பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். ஆனால், தற்போது ஆத்விக் செய்திருக்கும் சம்பவம் சாதாரணமானது கிடையாதுங்க அவரும் இப்போ கார் ரேஸிற்கு தயாராகிட்டாரு. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற கதையை போல் ஆத்விக்கும் மிகா கா கோர்ட்டின் ஓடுதளத்தில் அஜித் ஆத்விக்கிற்கு கார் ஓட்டுவது குறித்த பயிற்சி அளித்திருக்கிறார். தந்தை சொல்லை தட்டாமல் ஆத்விக் அதி வேகத்தில் செல்லும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அஜித்திற்கு கார் ரேஸ் உயிர் என்றால் ஆத்விக்கும் வருங்காலத்தில் மிகப்பெரிய ரேஸராக வருவார் போல என ரசிகர்கள் கமாண்ட் பட்டனை தட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X