Vidaamuyarchi Box Office.. விஜய்யிடம் தோற்றுவிட்டாரா அஜித்?.. விடாமுயற்சி முதல் நாள் வசூல் இவ்வளவா?

சென்னை: லைகா தயாரிப்பில் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தார்கள். பிரேக் டவுன் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்தச் சூழலில் முதல் நாளில் படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

துணிவு படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்தார் அஜித். மிகப்பெரிய எதிர்பார்ப்பு எதுவும் படத்துக்கு வைக்க வேண்டாம்; இது தன்னுடைய கதை இல்லை என்று மகிழ் திருமேனி சொல்லியிருந்தார். இருந்தாலும் ஏகேவின் படம் இரண்டு வருடங்களுக்கு பிறகு வருவதால் இப்படத்தின் மீது அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த எதிர்பார்ப்புடன் படம் பார்க்கவும் சென்றார்கள்.

vidaamuyarchi box office ajith

களைகட்டிய தியேட்டர்கள்: அஜித் ஸ்க்ரீனில் வந்தாலே போதும் அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரிப்பார்கள். அதுதான் விடாமுயற்சிக்கும் நடந்தது. ஏகப்பட்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு, பட்டாசுகள் வெடித்து, பாலாபிஷேகம் செய்து என தியேட்டரை களைகட்ட வைத்தார்கள். பண்டிகை நாளில் நமது படம் ரிலீஸாகாவிட்டாலும் நமது படம் ரிலீஸாகும் நாள் பண்டிகையாக மாறும் என்று அஜித் எவ்வளவு கான்ஃபிடென்ஸோடு சொன்னாரோ அதை அவரது ரசிகர்கள் நிறைவேற்றி வைத்தார்கள்.

படம் சுமார்தான்: தியேட்டருக்கு வெளியே இவ்வளவுப் பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு தியேட்டருக்குள் சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அவர்கள் எதிர்பார்த்தபடி படமானது இல்லை. ஆக்‌ஷன் அவதாரத்தை அஜித் எடுப்பார் என்று பார்த்தால்; அவ்வளவு பெரிய அவதாரம் எதுவும் இந்தப் படத்தில் அவர் எடுக்கவில்லை. அதேசமயம் அவர் செய்த கார் சேஸிங், ஃபைட் உள்ளிட்டவைகளை ரசிகர்கள் ஏகோபித்தமாக கொண்டாடி தீர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கலவையான விமர்சனம்: இருந்தாலும் படத்தின் கதை பிரேக் டவுன் என்றாலும்; திரைக்கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாக்கியிருக்கலாம்; அஜித்துக்கான மாஸ் சீன்களை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம் என்று ரசிகர்கள் நொந்துகொண்டார்கள். அதேசமயம் அஜித்தின் நடிப்பு தரமாக இருந்தது என்றும்; இவ்வளவு பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள ஒரு ஹீரோ; ஹீரோயிசத்தை பார்க்கலாம் குடும்பங்களுக்கான கதையை தேர்ந்தெடுத்ததற்கு பாராட்டலாம் என்று கலவையான விமர்சனத்தை கொடுத்துவருகிறார்கள்.

vidaamuyarchi box office ajith

எவ்வளவு வசூல்: இந்நிலையில் விடாமுயற்சி படம் தமிழ்நாட்டில் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்தது என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் அந்தப் படம் முதல் நாளில் 22 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தெலுங்கில் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம். அதேசமயம் விஜய் நடித்த GOAT திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக ஒரு ரிப்போர்ட் உண்டு. இந்த இரண்டு வசூல் நிலவரத்தையும் பார்த்த ரசிகர்கள் விஜய்யிடம் அஜித் தோற்றுவிட்டாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X