அஜித்தின் விடாமுயற்சி.. முதல் நாள் எவ்வளவு வசூலிக்கும்.. திரை ஆர்வலர்களின் கணிப்பு என்ன?

சென்னை: அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. அவருடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் படம் முதல் நாள் எத்தனை கோடி ரூபாய் வசூலிக்கும் என்பது குறித்த கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடித்திருக்கிறார் அஜித்குமார். கடந்த 2023ஆம் ஆண்டே படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஷூட்டிங்கும் அஜர்பைஜானில் தொடங்கியது. ஆனால் ஷூட்டிங்கின்போது ஏகப்பட்ட தடங்கல்கள் உருவாகின. அதனால் ரொம்பவே மெதுவாகத்தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மேலும் கலை இயக்குநர் மிலன் உயிரிழப்பு; அஜர்பைஜானில் ஏற்பட்ட கால மாற்றம் என விடாமுயற்சியை விடாமல் சோதனைகள் துரத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

ajith vidaamuyarchi
முடிந்த ஷூட்டிங்: இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் அஜித்தும் இடையில் பைக்கில் உலகம் சுற்ற கிளம்பினார். ஒருவழியாக அத்தனை சோதனைகளையும் கடந்து மகிழ் திருமேனி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார். படத்தின் போஸ்டர்கள், டீசர் ஆகியவை முதலில் வெளியிடப்பட்டன. அவை ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லரும், சிங்கிள்களும் வெளியிடப்பட்டன. அவைக்கு ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை கொடுத்தார்கள்.
இன்று ரிலீஸ்: படமானது முதலில் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் பிப்ரவரி ஆறாம் தேதிக்கு தள்ளிப்போனது. சொல்லியபடி இன்று உலகம் முழுவதும் விடாமுயற்சி வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தின் படம் வெளியாவதால் ஏகே ரசிகர்கள் அஜித்தின் தரிசனத்தை காண தியேட்டருக்கு படையெடுத்தார்கள். கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பீர் அபிஷேகம் உள்ளிட்ட அத்தனையையும் செய்தார்கள்.
கலவையான விமர்சனம்: தமிழ்நாட்டில் படத்தின் முதல் காட்சி காலை ஒன்பது மணிக்கு போடப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக இது வழக்கமான அஜித் படம் மாதிரி இல்லை என்று ஒருதரப்பினரும்; முதல் பாதி போல் இரண்டாவது பாதியும் இருந்திருக்கலாம் என்று ஒருதரப்பினரும் தங்களது மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவருகிறார்கள். இதனால் படக்குழுவும் சந்தோஷப்படுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும்.
எவ்வளவு வசூல்?: இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூ எவ்வளவு இருக்கும் என்று திரை ஆர்வலர்கள் கணித்திருக்கிறார்கள். அதன்படி கண்டிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடி ரூபாய்வரை விடாமுயற்சி வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக உலக அளவில் கண்டிப்பாக முதல் நாளில் விஜய்யின் GOAT பட சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக திரை ஆர்வல்ர்கள் கணித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X