விடாமுயற்சி வசூலில் விழுந்த செம அடி.. விடுமுறை நாளிலும் டல்.. ஓபனிங் கிங் அஜித் இல்லையா?

சென்னை: அஜித்தை வைத்து மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ரசிகர்களை படம் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. இதன் காரணமாக விமர்சன ரீதியாக அடி வாங்கிய திரைப்படம் வசூல் ரீதியாகவும் டல்லடிக்க ஆரம்பித்திருக்கிறது. முதல் நாளில் ஓரளவுக்கு நன்றாக இருந்த வசூல் நான்காவது நாளான நேற்று சுத்தமாக படுத்துவிட்டது. இதனால் ஓபனிங் கிங் அஜித் என்கிற பட்டத்துக்கு டேமேஜ் வந்துவிட்டதோ என்று ஏகே ரசிகர்கள் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்த படம் விடாமுயற்சி. ஆங்கில படமான பிரேக் டவுன் படத்தினை ரீமேக் செய்யலாம் என்று ஏகே கொடுத்த ஐடியாவின் காரணமாக தனது சொந்த கதையை பரணில் வைத்துவிட்டு இந்தக் கதையை இயக்க களத்தில் குதித்தார் மகிழ் திருமேனி. இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி அஜித்தின் ரசிகர்களுக்குமே கொஞ்சம் ஷாக்கைத்தான் கொடுத்தது. ஏனெனில் ஆக்‌ஷன், திரில்லர் படங்கள் இயக்குவதில் மகிழ் எப்போதும் கில்லாடி என்பது பலரும் அறிந்தது.
ajith vidaamuyarchi
விடாமுயற்சி ரிலீஸ்: படமானது முதலில் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் பிப்ரவரி ஆறாம் தேதிக்கு தள்ளிப்போனது. அதன்படி சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி உலகம் முழுவதும் ரிலீஸானது. பெரிய எதிர்பார்ப்போடு வராதீர்கள் என்று மகிழ் திருமேனி ஏற்கனவே ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சொல்லியிருந்தாலும்; அஜித்தின் ரசிகர்கள் ஃபுல் ஃபார்மில்தான் முதல் நாள் முதல் காட்சி பார்க்க திரையரங்குகளுக்கு சென்றார்கள்.
விடாமுயற்சியா? வீண் முயற்சியா?: உற்சாகத்தோடு படம் பார்க்க தியேட்டருக்குள் சென்று சீட்டில் அமர்ந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்தான் கிடைத்தது. அவர்கள் மனதில் வைத்திருந்தது எப்படியும் ஒரு தரமான ஆக்‌ஷன் படமாக இது இருக்கும் என்பதுதான். ஆனால் அவர்களுக்கு மகிழ் திருமேனியும், அஜித்தும் கொடுத்த ட்ரீட்மென்ட் வேறு. அஜித்தின் மாஸ் எலிமென்ட்ஸை கன்ட்ரோலில் வைத்து; முழுக்க முழுக்க அமைதியான படமாக கொடுத்திருந்தார்கள். அதன் காரணமாக அஜித்தின் ஆக்‌ஷன் காட்சிகளை ரசிக்கும் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டானார்கள்.

அதுமட்டுமின்றி பொதுவான ரசிகர்களுக்கும் படம் பெரும்பாலும் பிடிக்கவில்லை. திரைக்கதையில் ஒன்றுமே இல்லை; எதற்காக தேவையில்லாத பிளாஷ் பேக்குகள் என ஏகப்பட்ட மைனஸ்களை அடுக்கினார்கள். அதன் காரணமாக படம் விமர்சன ரீதியாக செமத்தியான அடி வாங்கியிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டும்தான் இப்படியா என்றால் வசூல் ரீதியாகவும் படம் பெரிதாக சோபிக்கவில்லை. முதல் நாளில் 23 கோடி ரூபாய்வரைதான் வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களில் வசூல் இறங்குமுகமாகவே அமைந்தது.

இந்நிலையில் விடாமுயற்சி படம் நான்காவது நாளான நேற்று எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கண்டிப்பாக படத்துக்கு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டம் குறையத்தான் செய்தது. இதனால் நான்காவது நாளில் படமானது தமிழ்நாட்டி 11 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து இந்திய அளவி 62 கோடி ரூபாயும், உலகளவில் 90 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 4 நாட்களில் 5க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகவிருப்பதால் விடாமுயற்சியின் படத்திற்கு மேலும் சிக்கல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X