பத்திக்கிச்சு ராட்சச திரி.. விடாமுயற்சி இரண்டாவது சிங்கிள்.. பட்டையை கிளப்புதே
சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் படம் விடாமுயற்சி. முதலில் இந்தப் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் பிப்ரவரி ஆறாம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. படத்தின் டீசர், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூழலில்; தற்போது படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வெளியாகியிருக்கிறது. இதனையும் ஏகே ரசிகர்கள் உச்சக்கட்டமாக கொண்டாடிவருகிறார்கள்.
அஜித் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துணிவு. அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விக்னேஷ் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி உள்ளே வந்தார். லைகா தயாரிப்பில் அவர் இயக்கும் படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

மெல்ல முடிந்த ஷூட்டிங்: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு ஷூட்டிங்கும் மும்முரமாக தொடங்கியது. ஆனால் தொடங்கிய வேகத்திலேயே ஷூட்டிங் நடக்கவில்லை. மாறாக ரொம்பவே ஸ்லோவாக படப்பிடிப்பு நடைபெற்றது. முதலில் நீரவ் ஷா இதில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ஆனால் அவர் வெளியேறி ஓம் பிரகாஷ் உள்ளே வந்தார். மேலும் கலை இயக்குநர் மிலன் படத்துடைய ஷூட்டிங்கின்போதே மரணமடைந்தார். இன்னும் வேறு சில காரணங்களால்தான் படத்தின் ஷூட்டிங் முடிவடைய தாமதமானது.
படத்தின் ட்ரெய்லர்: ஒருவழியாக படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து டீசர் வெளியானது. அந்த டீசரில் ஒரு வசனம்கூட இடம்பெறவில்லை. இருந்தாலும் மகிழ் திருமேனியின் மேக்கிங், அஜித்தின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் பட்டையை கிளப்பின. அதனைத் தொடர்ந்து படமானது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. சூழல் இப்படி இருக்க படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படமும் பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல் சிங்கிள்: இதற்கிடையே படத்திலிருந்து ஸவதீகா என்ற முதல் சிங்கிள் வெளியானது. அதனை அனிருத்தும், அந்தோணி தாசனும் பாடியிருந்தார்கள். அந்தப் பாடலில் அஜித்தையும், திரிஷாவையும் பார்த்த ரசிகர்கள் அட ஜோடி பொருத்தம் அள்ளுதே என்று கமெண்ட்ஸ் செய்தனர். முக்கியமாக அஜித்தின் நடனமும் அவரது லுக்கும் அவ்வளவு க்யூட்டாக இருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் பந்தயம் அடிப்பது உச்சக்கட்ட உறுதி என்று இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது சிங்கிள்: இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிளான பத்திக்கிச்சு பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடலிலும் அனிருத் தனது வழக்கமான இசையை கொடுத்திருக்கிறார். அதேசமயம் பாடல் வரிகள் அனைத்துமே மிகச்சிறப்பாக இருக்கின்றன. பாடலை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் எழுத அனிருத்தும் யோகி சேகரும் பாடலை பாடியிருக்கிறார்கள். 'பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி வெடிச்சுதான் இது தீருமே பொத்தி வெச்ச அணு ஆயுதம் இனி உலகையே பலி கேட்குமே' என்று தொடங்கும் அந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











