அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்?.. விடாமுயற்சி ரிலீஸ் எப்போ தெரியுமா?.. ஏகே ரசிகர்களே ரெடியா?
சென்னை: அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில சிக்கல்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் அன்றைய தேதியிலிருந்து தள்ளி வைக்கப்பட்டது. சூழல் இப்படி இருக்க படம் எப்போது ரிலீஸாகும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சூழலில் அதுகுறித்த புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அஜித் நடித்த துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதனையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். மகிழுடன் அஜித் முதன்முறையாக சேர்வதாக வெளியான அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியது.

தாமதமான விடாமுயற்சி: படத்தின் அறிவிப்பு, படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு என எல்லாமே படு வேகமாக வந்தது. ஆனால் ஷூட்டிங்கோ ரொம்பவே மெதுவாக நடந்தது. ஆர்ட் டைரக்டர் மிலன் மரணம், ஒளிப்பதிவாளர் மாற்றம் என படத்தின் ஷூட்டிங்கின்போது ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன. இருப்பினும் படம் ட்ராப் ஆகாது என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை தொடர்ந்து வைத்துக்கொண்டே இருந்தனர்.
டீசர் ரிலீஸ்: ஆனால் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்தது. சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட உற்சாகத்துக்கு சென்றார்கள். டீசரில் வசனங்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் அஜித்தின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸும், மகிழ் திருமேனியின் மேக்கிங்கும் பட்டையை கிளப்பின. இதனையடுத்து படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி அதுவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தள்ளிப்போன ரிலீஸ்: படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இதனால் பொங்கல் ரிலீஸுக்கு பிளான் செய்திருந்த மற்ற படங்கள் தங்கள் பட ரிலீஸை தள்ளி வைக்க முடிவு செய்திருந்தன. ஆனால் திடீரென விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஜனவரி பத்தாம் தேதியிலிருந்து தள்ளிப்போனது. இதற்கான தெளிவான காரணம் என்ன என்பதை படக்குழுவினர் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
என்ன காரணம்?: ஆனால் கோலிவுட்டில் பரவும் தகவல்படி, விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் தழுவல். அதற்கான அனுமதியை முறையாக விடாமுயற்சி படக்குழுவினர் பெறவில்லை. இதனால் பெரிய தொகையை நஷ்ட ஈடாக கேட்டு பிரேக் டவுன் பட தயாரிப்பு நிறுவனம் லைகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் உடனடியாக அந்தப் பணத்தை லைகாவால் ரெடி செய்ய முடியவில்லை. ஒருவழியாக பேச்சுவார்த்தை முடித்து குறிப்பிட்ட அளவுக்கான தொகையை ஃபைனல் செய்தது.
எப்போது ரிலீஸ்: இந்தத் தொகையை செட்டில் செய்த பிறகுதான் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற நிலைமை உருவானதால்தான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி கொடுக்க வேண்டிய தொகையை லைகா செட்டில் செய்துவிட்டதால் ஜனவரி 23ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications